மும்பை தனியார் வங்கியில் சுமார் 40க்கும் அதிகமான வாடிக்கையாளர்களிடம் இருந்து வெறும் 3 நாளில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டு உள்ளது. வெறும் ஒரு லிங்க் அனுப்பி இந்த மாபெரும் மோசடி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் உலகில் அனைத்து விதமான நிதி சேவைகளும் இணையம் வாயிலாகவே கிடைப்பதால் பல சௌகரியம் இருந்தாலும், இதில் பல ஆபத்துகளும் உள்ளது என்பது மறுக்க முடியாது. இணைய சேவைகளை நாளுக்கு நாள் மேம்படுவது போல திருடர்களும், மோசடியாளர்களும் மக்களிடம் டிசைன் டிசைனாக கொள்ளையடிக்கும் வழியை கண்டுப்பிடித்து வருகின்றனர்.
வங்கிகள், மத்திய அரசு, ஆர்பிஐ என பல அமைப்புகள் இணைய மோசடிகள் குறித்து விழிப்புணர்வு அளித்தாலும் இந்திய மக்களுக்கு இது சரியாக சென்றடையவில்லை என்றால் மிகையில்லை. இதற்கு முக்கியமான உதாரணம் தற்போது மும்பை தனியார் வங்கி கிளையில் நடந்திருக்கும் மோசடி.
தனியார் வங்கி
மும்பையில் ஒரு தனியார் வங்கியை சேர்ந்த 40க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு ஒரு மோசடி கும்பல் KYC, PAN விபரங்கள் அப்டேட் குறித்து ஒரு லிங்க் உடன் மெசேஜ் அனுப்பியுள்ளது. இந்த லிங்க்-ஐ கிளிக் செய்த அனைத்து வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்தும் பணம் களவாடப்பட்டு உள்ளது.
KYC, PAN விபரங்கள்
வங்கியில் KYC, PAN விபரங்களை அப்டேட் செய்வது மிகவும் முக்கியம் என்பதால், இந்த மோசடி கும்பல் வலையில் 40க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் விழுந்துள்ளனர். இந்த நிலையில் மும்பை போலீஸ் அதிகாரிகள் மக்களுக்கு வங்கி தரவுகள் குறித்து வரும் மெசேஜ்-ல் இருக்கும் லிங்க்-களை கிளிக் செய்ய கூடாது என அலோசனை விடுத்துள்ளது.
வங்கி கணக்கு முடக்கம்
இந்த மோசடி கும்பல் KYC, PAN விபரங்கள் அப்டேட் செய்யாத காரணத்தால் வங்கி கணக்கு முடக்கப்பட்டு உள்ளது என போலியாக வங்கிகள் அனுப்புவது போலவே மெசேஜ் அனுப்பியது. முடக்கப்பட்ட வங்கி கணக்கை திரும்ப பெற மெசேஜ்-ல் உள்ள இணைப்பை கிளிக் செய்து அப்டேட் செய்ய அறிவுறுத்தியுள்ளது.
போலியான இணையத்தளம்
இணைப்பை கிளிக் செய்த உடன் வங்கியை போலவே ஒரு போலியான இணையத்தளத்திற்கு கொண்டு செல்கிறது. இதில் இண்டர்நெட் பேங்கிங்-ன் கஸ்டமர் ஐடி, பாஸ்வோர்டு, இதர முக்கியமான தரவுகளை கேட்டு உள்ளது. இது மோசடி என தெரியாமல் தகவல் பதிவு செய்த மக்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டு உள்ளது.
டிவி நடிகை ஸ்வேதா மேனன்
இப்போது பாதிக்கப்பட்ட 40 வாடிக்கையாளர்களில் டிவி நடிகை ஸ்வேதா மேனன்-ம் ஒருவர், இவர் அளித்த புகாரில் இந்த போலி மெசேஜ்-ல் குறிப்பிட்ட லிங்க்-ஐ கிளிக் செய்து தகவல்களை பதிவு செய்த உடனே, வங்கி தரப்பில் இருந்து அழைப்பு வந்ததாகவும், இந்த அழைப்பில் பேசியவர் OTP-ஐ பதிவிட சொன்னதால் பதிவிட்ட அடுத்த சில நிமிடத்தில் தனது வங்கி கணக்கில் இருந்து 57,636 ரூபாய் டெபிட் செய்யப்பட்டதாக தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications