பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்று 10 ஆண்டுகள் நிறைவு பெற உள்ளது. நாட்டின் பிரதமராக பதவி ஏற்ற போது, விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என உறுதி அளித்தார் பிரதமர் மோடி. இன்று வரையில் இந்த இலக்கை அடைய கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது மத்திய.
இந்த நிலையில் மத்திய அரசு விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைபடுத்தியுள்ளது. அந்த வகையில் விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் என்னென்ன இருக்கிறது தெரியுமா..?

பிரதமர்-கிசான் உதவி திட்டம்: பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 2019ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய திட்டம் தான் பிஎம் கிசான் யோஜனா என்ற நிதி உதவித்தொகை திட்டம். இந்த மூலம் ஓராண்டில் மூன்று தவணைகளாக விவசாயிகளுக்கு ரூ.2,000 வீதம் மொத்தம் ரூ.6,000 வழங்கப்படுகிறது. இது நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கிற்கே அனுப்பப்படுகிறது.
பயிர்க்காப்பீடு திட்டம்: புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் பயிர் பாதிப்புகள், பூச்சி, நோய் தாக்குதல்களால் வேளாண் பயிர் சாகுபடியில் ஏற்படும் மகசூல் இழப்பு ஆகியவற்றில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதற்கு விவசாயிகள் பயிர்க்காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். காப்பீடு காலத்தில் ஏற்படும் மகசூல் இழப்புகள் மற்றும் பாதிப்புகளுக்கு காப்பீடு தொகை வழங்கப்படும்.
பிரதமர் கிரிஷி சின்சாய் திட்டம்: நீர்ப்பாசனங்களை ஒழுங்குப்படுத்தி அதன் மூலம் மகசூலை அதிகரிக்க உதவும் திட்டம் இது. வறட்சியால் வேளாண் பயிர்கள் பாதிக்கப்படுவதை தடுத்து நீர்ப்பாசன ஆதாரங்களை மேம்படுத்தும் வகையில் பிரதமர் கிரிஷி சின்சாய் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வேளாண் உள்கட்டமைப்பு நிதி: விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைப்பொருட்களை மதிப்புக்கூட்டி, லாபகரமான விலைக்கு விற்பனை செய்யும் வகையில் அரசு, தனியார் நிறுவனம் மூலம் உட்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு என தொடங்கப்பட்டது இந்த நிதி. இந்த திட்டத்தின் மூலம் வட்டி மானியத்துடன் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படுகிறது.
கிசான் கடன் அட்டை: கிசான் கடன் அட்டை திட்டம் விவசாயிகள், விவசாயம் மற்றும் அதை சார்ந்த தேவைகள் மற்றும் பண்ணை சாரா நடவடிக்கைகளுக்கு வங்கிகளில் இருந்து தேவை அடிப்படையில் கடன் பெற உதவுகிறது. விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், உழுதல், சாகுபடி மற்றும் சந்தை செலவுகள் என அனைத்திற்கும் எளிதாக இதன் மூலம் கடன் பெறலாம்.
தேசிய நிலையான வேளாண்மை திட்டம்: புவி வெப்பமயமாதல் காரணமாக ஏற்படும் காலநிலை மாற்றங்களால் விவசாயம் பெரும் பாதிப்பை சந்திக்கிறது. எனவே நீடித்த நிலையான வேளாண் நடைமுறைகளை கொண்டு வந்து ஒருங்கிணைந்த விவசாயம், முறையான நீர் மேலாண்மை, மண் வளம் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க உருவாக்கப்பட்ட திட்டம் இது. எதிர்காலத்தில் விவசாயத்தையும் உணவு உற்பத்தியையும் பாதுகாக்கும் ஒரு திட்டம் ஆகும்.
இது தவிர ட்ரோன்கள் மூலம் பயிர்களை கண்காணிப்பது , மருந்துகளை தெளிப்பது போன்ற நடைமுறைகளும் அமலுக்கு வந்துள்ளன. கால்நடை பராமரிப்புக்கு உதவும் ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் உள்ளிட்ட திட்டங்களையும் அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
Story written by: Devika Manivannan
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications