இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 'ஒரு வாகனம், ஒரு பாஸ்ட்டேக்' கொள்கையை அறிமுகப்படுத்தியது மூலம் தனிநபர்கள் பல வாகனங்களுக்கு ஒரே பாஸ்ட்டேக்கைப் பயன்படுத்துவதைத் தடுக்கிறது. போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதும், நாடு முழுவதும் சுங்கக் கட்டண வசூலை முறைப்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
இதன் விளைவாக, பிப்ரவரி 29 ஆம் தேதிக்குள் நீங்கள் கேஒய்சி அப்பேட்டை செய்து முடிக்கவில்லை என்றால், உங்கள் பாஸ்ட்டேக் செயலிழக்கப்படலாம். இந்த மேம்பாடு உங்கள் பாஸ்ட்டேக்கின் ஸ்டேட்டஸை எவ்வாறு சரிபார்ப்பது என்பதையும் காலக்கெடுவுக்கு முன் அதை எவ்வாறு புதுப்பிப்பது என்பது பற்றியும் இங்கு அறிந்து கொள்ளலாம்.

பாஸ்ட்டேக் கேஒய்சியை என்எச்ஐஏ வெப்சைட்டில் அப்டேட் செய்யும் முறை:
- https://fastag.ihmcl.com என்ற இணையதளத்துக்கு சென்று உங்களது பதிவுச்செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் லாகின் செய்யவும்.
- டாஷ்போர்டு மெனுவில் உள்ள 'My Profile' ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- 'My Profile' பக்கத்தில் உள்ள 'KYC' ஆப்ஷனை தேர்வு செய்து உங்களது 'Customer Type' ஐ கிளிக் செய்யவும்.
- ஸ்கிரீனில் தெரியும் வழிகாட்டுதலை பின்பற்றி உங்கள் பாஸ்ட்டேக் கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்யவும்.
- நீங்கள் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்த பின்னர் உங்கள் கேஒய்சி அங்கீகாரம் அடுத்த 7 வேலை நாட்களுக்குள் தெரிவிக்கப்படும்.
வங்கி வெப்சைட் மூலம் பாஸ்ட்டேக் கேஒய்சியை அப்டேட் செய்யும் முறை:
- உங்களது வங்கியின் வெப்சைட்டுக்கு சென்று உங்களது பாஸ்ட்டேக் அக்கவுன்ட்டை லாகின் செய்யவும்.
- அதில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதலைப் பின்பற்றி உங்களது பாஸ்ட்டேக் கேஒய்சியை அப்டேட் செய்யவும்.
ஆன்லைனில் பாஸ்ட்டேக் கேஒய்சியை அப்டேட் செய்யும் வழிமுறை:
- உங்களுக்கு அருகில் உள்ள பாஸ்ட்டேக் தரும் வங்கியில் உங்களது பான் கார்டு, அடையாள ஆவணம், முகவரி சான்று, பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை தரவும்.
- கேஒய்சி விண்ணப்பத்தை வாங்கி அதை பூர்த்தி செய்து வங்கிப் பணியாளரிடம் தரவும்.
- விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் தந்தால் வங்கி அதை சரிபார்த்து பிராசஸ் செய்யும்.
- உங்களது பாஸ்ட்டேக் கேஒய்சி அப்டேட் ஆன விவரம் உங்களுக்கு எஸ்எம்எஸ் அல்லது இமெயில் மூலம் தெரிவிக்கப்படும்.
பாஸ்ட்டேக் கேஒய்சி அப்டேஷனுக்குத் தேவையான ஆவணங்கள்:
ரிசர்வ் வங்கி விதிகளின்படி கீழ்க்கண்ட செல்லத்தக்க ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்:
- பாஸ்போர்ட்
- டிரைவர் லைசன்ஸ்
- வோட்டர் ஐடி
- பான் கார்டு
- ஆதார் கார்டு
- அரசு ஊழியர் என்றால் என்ஆர்இஜிஏ ஜாப் கார்டு
- ஆகியவற்றை தர வேணடும்.
- அத்துடன் உங்களது வாகன ரெஜிஸ்ட்ரேஷன் சான்றிதழ் பிரதியையும் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் உங்களது பாஸ்ட்டேக் கேஒய்சியை எப்படி சரி பார்ப்பது?:
- https://fastag.ihmcl.com என்ற வெப்சைட்டுக்கு சென்று உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் லாகின் செய்யவும்.
- டாஷ்போர்ட் மெனுவில் உள்ள 'My Profile' என்பதை கிளிக் செய்து அதில் உங்களது கேஒய்சி அப்டேட்டை சரிபார்க்கவும்.
- NHAI FASTag websiteடில் உங்களது மொபைல் போன் ரிஜிஸ்டர் செய்யப்படாவிட்டால், MyFASTag விண்ணப்பத்தை டவுண்லோடு செய்யவும். பின்னர் மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி உங்களது கேஒய்சி அப்டேட்டை சரிபார்க்கவும்.
Story Written by: I. Jayachandran


Click it and Unblock the Notifications