ஐடிசி நிறுவனம் இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் மிக முக்கியமான முதலீடாக விளங்கும் வேளையில், ஐடிசி பங்குகளில் முதலீடு செய்த ஒருவர், தான் வாங்கிய பங்குகளை மறந்துப்போன நிலையில், இப்போது தெரிய வந்தது மூலம் இன்ப அதிர்ச்சி கிடைத்துள்ளது.
ராஞ்சியில் உள்ள ஹதியா பகுதியில் வசிக்கும் உஷா சர்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஐடிசி பங்குகள் தொடர்புடைய நிதி நாடகத்தில் தன்னை அறியாமலேயே ஒரு கதாநாயகியாக மாறிப் போனார்.

1970 களில், உஷாவின் தந்தை, இப்போது இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் FMCG நிறுவனங்களில் ஒன்றான ஐடிசி நிறுவனத்தில் முதலீடு செய்து 420 பங்குகளை வாங்கினார். அதன்பின்னர் அதைப் பற்றி மறந்தே போனார்.
பல ஆண்டுகளாக, போனஸ் மற்றும் பங்குப் பிரிப்பு போன்ற கார்ப்பரேட் நடவடிக்கைகள் அந்த பங்குகளை 2017 இல் 6.5 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 1,73,880 ஐடிசி பங்குகளாக மாற்றியது. உஷா, தனது தந்தை மற்றும் அவரது சகோதரரின் மறைவுக்குப் பிறகு, இந்த அதிர்ஷ்டத்தின் ஒரே வாரிசு ஆனார்.
இருப்பினும், இந்த செல்வத்தை உரிமை கொண்டாடுவது உஷாவுக்கு எளிதான காரியமாக இருக்கவில்லை. பங்குகள் மிகவும் மதிப்புமிக்கதாக இருந்ததால், பங்குகளை உஷா ஷர்மாவின் பெயருக்கு மாற்றினால், நீதிமன்றத்தில் இருந்து வாரிசுச் சான்றிதழைப் பெற வேண்டும்.
ராஞ்சியில் இருந்து வெகு தொலைவில் உள்ள ஹரித்வாரில் உள்ள நீதிமன்றத்தில் வாரிசு சான்பிதழ் பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. இறுதியில் உஷா சான்றிதழைப் பெற்றார். இப்போது, ஐடிசியின் பங்குகளைப் பெறுவது மட்டுமே எஞ்சியுள்ளது. இது மற்றொரு பெரிய தடையாக இருந்தது.
உஷாவின் வாரிசுரிமையைப் பெற பலமுறை முயன்றும் நிராகரிக்கப்பட்டது, நிறைய ஆவணங்கள் தேவைப்பட்டன.
அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கும், பங்கு பரிமாற்றத்துக்குத் தேவையான ஆவணங்களை ஐடிசி பெறுவதற்கும் அவர் நிறைய முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், உஷா அதிக நிராகரிப்புகளை மட்டுமே சந்தித்தார்.
அப்போதுதான் அவரது மகன் சஞ்சய் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), வெளி உதவியை நாட முடிவு செய்தார். முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி நிறுவனமான ஷேர் சமாதானன் என்ற ஒரு நிதித் துப்பறியும் நிறுவனத்தின் உதவியை நாடினார். இந்த நிறுவனம் உஷாவுக்குத் தேவையான ஆவணங்களைப் பெற்றுத் தந்தது.
உஷா ஷர்மாவின் சார்பாக ஐடிசிக்கு ஷேர் சமாதான் அழைப்புகள் மற்றும் கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்களை எழுதியது. சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு, வெற்றி!
ஐடிசி இறுதியாக மறைந்த மனன் லால் ஷர்மாவின் மொத்தம் 1,73,880 ஈக்விட்டி பங்குகளை உஷா ஷர்மாவின் பெயரில் மாற்றியது. இது பண அடிப்படையில் மட்டுமல்ல, புதிய வாழ்க்கையின் அர்த்தத்திலும் இனிமையான ஒரு வெற்றியாகும்.
More From GoodReturns

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications