அமெரிக்கக மத்திய வங்கியான பெடரல் ரிசர்வின் தலைவர் கெவின் வார்ஷ்-ன் ஜாக்சன் ஹோல் சிம்போசியம் பேச்சு உலக முதலீட்டாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சொல்லி வைத்தது போல் தங்கம் விலை தடாலடியாக இந்த வாரம் முடியும் போது பதிவாகியுள்ளது.
இதன் மூலம் திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் தங்கம் விலை பெரிய அளவிலான சரிவை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு கெவின் வார்ஷ் என்ன பேசினார், தங்கம் விலை ஓரே நாளில் (29ஆம் தேதி) எப்படி 3 சதவீதம் வரையில் குறைந்தது என்பதை தெரிவித்துக்கொள்ள வேண்டும்.

அமெரிக்காவில் முக்கிய கூட்டத்தில் பேசிய கெவின் வார்ஷ், அமெரிக்காவின் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இது இலக்கை காட்டிலும் அதிமாக இருக்கும் காரணத்தால் மத்திய வங்கி இதை சரி செய்ய கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக வட்டி விகித உயர்வு குறித்து உறுதியான கருத்தை வைத்தார்.
பெட் நாணய கொள்கை கூட்டம் முடிந்து, பெட் கூட்டணித்தின் முடிவுகள் வெளியாகி, ஜாக்சன்ஹோல் கூட்டத்தில் கெவின் வார்ஷ் பேசியது வரையில் வட்டி விகித உயர்வில் எவ்விதமான மாற்றமும் இல்லை. இது முதலீட்டு சந்தைக்கு மிகப்பெரிய சிக்னலாக உள்ளது.
அடுத்த முக்கிய விஷயமாக அமெரிக்காவில் விவசாயம் அல்லாத துறைகளில் வேலைவாய்ப்பு உருவாகும் எண்ணிக்கை 0.1 சதவீதம் சரிந்துள்ளதாக அந்நாட்டின் வேலைவாய்ப்பு புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
இவை இரண்டும் தங்கம் விலைக்கு எதிராக திரும்பிய காரணத்தால் சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 29ஆம் தேதி வர்த்தக முடிவில் 3.19 சதவீதம் சரிந்து 4,455.02 டாலராக உள்ளது, இதேபோல் 4445.58 டாலர் வரையில் குறைந்தது கூடுதல் அதிர்ச்சியை கொடுத்தது. இதன் மூலம் கடந்த ஒரு வாரத்தில் தங்கம் விலை 3.22 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு ஏற்றார் போல் சனிக்கிழமை வர்த்தகத்தில் சென்னை ரீடைல் சந்தையில் ஒரு கிராமுக்கு 322 ரூபாய் குறைந்து 24 கேரட் தங்கம் 15,824 ரூபாயாக உள்ளது, இதேபோல் 22 கேரட் தங்கம் விலை 295 ரூபாய் குறைந்து 14,505 ரூபாயாக குறைந்துள்ளது. ஆனாலும் ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் விலை சுமார் 9.43 சதவீதம் வரையில் உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்கம் திங்கட்கிழமை வர்த்தகத்திலும் தொடரும் என கணிக்கப்படும் காரணத்தால் குறைந்தபட்சம் 1 சதவீதம் வரையிலான சரிவை பதிவு செய்யும் என கணிக்கப்படுகிறது.
இதேவேளையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் முக்கிய காரணியாகவும் இருக்கிறது, இதன் விலையில் பெரிய அளவிலான சரிவு பதிவாகும் பட்சத்தில் தங்கம் விலையில் சரிவு கட்டுப்படுத்தப்படும்.


Click it and Unblock the Notifications

