பண்டிகை கால பர்சேஸ்.. ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கலாமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பண்டிகை காலங்களில் போனஸ் உள்பட பல்வேறு புதிய வருமானம் வரும் நிலையில் பொதுமக்கள் ஏதாவது புதிய பொருள் வாங்கலாம் என்று ஆலோசனை செய்வார்கள்.

குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கும் தீபாவளி போனஸில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவது வழக்கமாக உள்ளது.

அந்த வகையில் இந்த ஆண்டு பண்டிகை கால போனஸ் தொகையில் ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கலாமா? அந்த ஸ்கூட்டரின் விலை என்ன? என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

துபாய் வேலை.. இந்தியா திரும்பிய இளைஞர்.. லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் தொழிலதிபர்துபாய் வேலை.. இந்தியா திரும்பிய இளைஞர்.. லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் தொழிலதிபர்

60,000 முதல் ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

60,000 முதல் ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை ரூ.60,000ல் தொடங்கி சுமார் ரூ.80,000 வரை விற்பனையாகிறது.; ஹீரோ நிறுவனம் நடுத்தர விலையிலும் மின்சார ஸ்கூட்டர்களையும் விற்பனை செய்து வருகிறது. சிறந்த தோற்றம், சிறந்த பேட்டரிகளை கொண்ட ஹீரோ நிறுவனத்தின் ஆப்டிமா, ஃபோட்டான், AD, NYX மற்றும் Flash ஆகிய மாடல்களில் ஒன்றை இந்த பண்டிகை காலத்தில் வாங்கலாம்.

ஹீரோ எலக்ட்ரிக் ஆப்டிமா

ஹீரோ எலக்ட்ரிக் ஆப்டிமா

ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் சிறப்பாக விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் ஆப்டிமா ஒன்றாகும். இதன் ஆரம்ப விலை ரூ.62,190. அதேசமயம் அதன் டாப் மாடல் ரூ.77,490க்கு கிடைக்கும். ஹீரோ ஆப்டிமா ஒருமுறை சார்ஜ் செய்தால் 140 கிமீ வரை ஓட்ட முடியும். இதன் உச்ச வேகம் மணிக்கு 45 கி.மீ.

ஹீரோ எலக்ட்ரிக் ஃபோட்டான்

ஹீரோ எலக்ட்ரிக் ஃபோட்டான்

ஹீரோ எலக்ட்ரிக் ஃபோட்டான் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ.80,790 ஆக வைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 108 கிமீ வரை ஓட்ட முடியும். இதன் அதிகபட்ச வேகம் அதாவது அதிகபட்ச வேகம் மணிக்கு 45 கி.மீ.

ஹீரோ எலக்ட்ரிக் NYX

ஹீரோ எலக்ட்ரிக் NYX

ஹீரோ எலக்ட்ரிக் NYX மாடல் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ.77,540. இந்த ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 165 கிமீ வரை ஓட்ட முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 42 கி.மீ.

மலிவான மின்சார ஸ்கூட்டர்

மலிவான மின்சார ஸ்கூட்டர்

ஹீரோ எலக்ட்ரிக் சில மலிவான ஸ்கூட்டர்களையும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறது. எனவே இந்த மலிவான ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மலிவான விலையில் வாங்கலாம்.

ஹீரோ ஃப்ளாஷ்

ஹீரோ ஃப்ளாஷ்

மலிவான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்று ஹீரோ பிளாஷ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர். இதன் ஆரம்ப விலை ரூ.59,640. ஒருமுறை சார்ஜ் செய்தால் 85 கிமீ வரை ஓட்டலாம். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கி.மீ.

ஹீரோ எலக்ட்ரிக் ஏ.டி

ஹீரோ எலக்ட்ரிக் ஏ.டி

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குபவர்களுக்கு இந்த மாடல் ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ.72,000. ஒருமுறை பேட்டரி முழுவதுமாக சார்ஜ் செய்யப்பட்டால், 85 கிமீ வரை பயணிக்கும். இதன் ஸ்கூட்டர் மணிக்கு 25 கிமீ வேகத்தில் செல்லும்.

ஹீரோ எலக்ட்ரிக் ஏட்ரியா

ஹீரோ எலக்ட்ரிக் ஏட்ரியா

ஹீரோ எலக்ட்ரிக் ஏட்ரியா மாடல் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ.71,690. இந்த ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 85 கிமீ வரை இயக்க முடியும். இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிமீ ஆகும்.

ராஜஸ்தானில் ஆலை

ராஜஸ்தானில் ஆலை

ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் ராஜஸ்தானில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு ஆலையை அமைக்கவுள்ளது. இதற்காக ராஜஸ்தான் அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஆலையின் ஆண்டு உற்பத்தி திறன் 20 லட்சம் யூனிட்டுகளாக இருக்கும் என்றும், 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் உற்பத்தி தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Festival season purchase, How to buy Hero electric in low price?

Festival season purchase, How to buy Hero electric in low price?| பண்டிகை கால பர்சேஸ்.. ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கலாமா?
Story first published: Wednesday, September 28, 2022, 6:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X