இந்தாண்டு தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது, சர்வதேச அளவில் நடக்கும் போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து விட்டது. அதுவும் ஒரே நாளில் காலை மாலை என தங்கம் விலை விடாமல் உயர்ந்து வருவது நகைப்பிரியர்களை கவலையடைய செய்துள்ளது.
இந்த சூழலில், தசரா பண்டிகையின்போது தங்கத்தின் தேவை 25% குறைந்திருப்பதாகவும், ஒட்டுமொத்த விற்பனையின் அளவு 24 டன்னில் இருந்து 18 டன்னாக சரிந்திருப்பதாகவும் India Bullion & Jewellers Association (IBJA) தெரிவித்துள்ளது. மேலும், தங்கத்தின் விலை உயர்வு தான் இதற்கு முக்கிய காரணம் என்று நகை விபாயாரிகள் கூறி வருகின்றனர்.

தசரா பண்டிகை அன்று 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1.16 லட்சமாக இருந்தது. இதுவே, விற்பனை அளவு குறைய முக்கிய காரணமாக இருந்ததாக IBJA-வின் தேசியச் செயலாளர் சுரேந்திர மேத்தா தெரிவித்துள்ளார். கடந்த வருடம் தசராவுக்கு 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.78,000 ஆக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு சுமார் 50% அதிகரித்திருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஆனால், தங்கம் மீதான விலை உயர்வால் விற்பனை அளவு குறைந்தாலும், விற்பனை மதிப்பின் அடிப்படையில் சுமார் 30 முதல் 35% வரை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தங்கத்தின் விலையுடன், வாடிக்கையாளர்கள் 3% ஜிஎஸ்டி வரியையும் செலுத்த வேண்டும். நகையின் வடிவமைப்பை பொறுத்து 15% முதல் 30% வரை சேதார கட்டணமும் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விற்பனை குறைந்திருந்தாலும், அதை வாங்க பாரம்பரியமாக உகந்ததாக கருதப்படும் தசரா பண்டிகையின்போது, தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகளுக்கான தேவை அதிகமாகவே இருந்துள்ளது. குறிப்பாக, 5 கிராம் தங்க காசுகளும், 20 கிராம் வெள்ளிக் காசுகளும் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளன.
மேலும், விலையின் தாக்கத்தை குறைக்க குறைந்த எடை கொண்ட நகைகளுக்கான முன்பதிவுகள் சிறப்பாக இருந்ததாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஒட்டுமொத்த விற்பனையில் சுமார் 50 முதல் 55% வரை, பழைய தங்கத்தை கொடுத்து புதிய நகைகளை மாற்றிக் கொண்டதன் மூலம் கிடைத்ததாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மத்திய இந்தியாவில் வைர நகைகள் உள்ளிட்ட திருமண நகைகளுக்கான விற்பனை சிறப்பாக இருந்ததாகவும், விலை அதிகமாக இருந்தாலும் வாடிக்கையாளர்களின் மனநிலை மாறாமல் இருந்ததாகவும் வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
தென்னிந்தியாவில் மந்தமான விற்பனை : இதற்கு மாறாக, தென்னிந்தியாவில் தங்கத்தின் விற்பனை ஒப்பிடும்போது சுமாராகவே இருந்தது. பல வாடிக்கையாளர்கள், நேரடியாக நகைகள் வாங்குவதற்கு பதிலாக, தங்கக் கட்டிகளை வாங்கி, பின்னர் அவற்றை நகைகளாக மாற்றிக் கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸ் (Jos Alukkas) நிர்வாக இயக்குநர் வர்கீஸ் ஆலுக்காஸ் கூறுகையில், "10 கிராம் முதல் 20 கிராம் வரையிலான தங்க கட்டிகளே அதிகம் விற்பனையாகின்றன. வாடிக்கையாளர்கள் 55 முதல் 60% வரை பழைய தங்கத்தை மாற்றிக்கொண்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
தங்கத்தின் விலை இனி குறைவதற்கு வாய்ப்பு இருக்காது என்று வாடிக்கையாளர்கள் நினைத்தாலும், தங்கத்தின் மீதான மோகம் மட்டுமே குறையவே இல்லை. அதிக விலையை பொருட்படுத்தாமல், வரவிருக்கும் தீபாவளி பண்டிகை, திருமண நிகழ்வுகளுக்காக பலரும் தற்போதில் இருந்தே நகைகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?



Click it and Unblock the Notifications