மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 49வது கூட்டம், டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று நண்பகல் 12 மணிக்குத் துவங்கியது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள், மத்திய அரசு மற்றும் மாநில அரசின் மூத்த அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதாக நிதி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது.
பான் மசாலா மற்றும் குட்கா
மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு அதிகாரிகள் கலந்து கொள்ளும் கூட்டத்தில், பான் மசாலா மற்றும் குட்கா வணிகத்தில் வரி ஏய்ப்பைத் தடுக்க மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்கள் மற்றும் வழிமுறைகள் அமைப்பது குறித்துக் கவுன்சில் ஆலோசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்லைன் கேமிங்
மேலும் இந்தியா முழுவதும் எதிர்பார்த்து இருக்கும் ஆன்லைன் கேமிங் குறித்த அமைச்சர்கள் குழுவின் அறிக்கை மற்றும் ஜிஎஸ்டி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் அறிக்கையை இக்கூட்டத்தில் வெளியிட வாய்ப்பு என்று மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (சிபிஐசி) தலைவர் விவேக் ஜோஹ்ரி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
கடைசி சந்திப்பில்
ஜிஎஸ்டி கவுன்சிலின் 48வது கூட்டம் டிசம்பர் 17, 2022 அன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது. கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பொருள் ஆதாரங்களைச் சேதப்படுத்துவது உட்பட மூன்று வகையான குற்றங்களைக் குற்றமற்றதாக மாற்ற பரிந்துரைத்தது.
மூன்று வகையான குற்றங்கள்
அதிகாரியையும் அவரது கடமைகளைச் செய்வதைத் தடுப்பது , பொருள் ஆதாரங்களை வேண்டுமென்றே சிதைப்பது மற்றும் தகவல்களை வழங்கத் தவறியது ஆகிய மூன்று வகையான குற்றங்களைக் குற்றமற்றதாக மாற்ற பரிந்துரைத்தது.
ஜிஎஸ்டி வரி செலுத்துவோர் எண்ணிக்கை
மேலும் கடந்த கூட்டத்தில் பருப்பு உமி மற்றும் கத்திகளுக்கான ஜிஎஸ்டி விகிதங்கள் 5 சதவீதத்தில் இருந்து ஜீரோ சதவீத வரியாகக் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஜிஎஸ்டி அறிமுகம் செய்த 2017ல் ஜிஎஸ்டி கீழ் பதிவு செய்யப்பட்டோர் எண்ணிக்கை 60 லட்சமாக இருந்தது ஜனவரி 2023ல் இது 1.40 கோடியாக உயர்ந்துள்ளது.
2017 முதல் ஜிஎஸ்டி
ஜூலை 1, 2017 முதல் இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் ஜிஎஸ்டி (மாநிலங்களுக்கு இழப்பீடு) சட்டம், 2017 இன் விதிகளின்படி, ஜிஎஸ்டியை அமல்படுத்துவதால் ஏற்படும் வருவாய் இழப்புக்கு மாநிலங்களுக்கு ஐந்து வருட காலத்திற்கு இழப்பீடு வழங்கப்படுகிறது.
40 லட்சம் விற்றுமுதல்
இந்தியாவில் 2017 ஆம் ஆண்டில் இருந்து ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையில் இருக்கும் வேளையில் வருடத்தில் 40 லட்சம் வரையில் விற்றுமுதல் கொண்ட அனைத்து வர்த்தக அமைப்புகளும் ஜிஎஸ்டி வரியின் கீழ் பதிவு செய்யப்பட்டு வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications