டெல்லி: இனி வரும் நான்கு மாதங்களுக்கு ஜிஎஸ்டி வசூல் 1.1 லட்சம் கோடி ரூபாயாக இலக்கு நிர்ணயித்துள்ளது மத்திய அரசு.
இது குறித்து வருவாய் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜிஎஸ்டி வரி வசூல் இலக்கை மத்திய அரசு 1.1 லட்சம் கோடி ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியுள்ளதாக வருவாய் துறை செயலாளரான அஜய் பூஷன் பான்டே தெரிவித்துள்ளார்.

அதிலும் நடப்பு நிதியாண்டில் எஞ்சியிருக்கும் மீதமுள்ள நான்கு மாதங்களுக்கும் இந்த வரி வசூல் இலக்கு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் வரி வருவாய் குறைவாகவும், செலவுகள் அதிகமாகவும் இருப்பதால் நாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இதற்கு ஒரு தீர்வு காணும் வகையிலும் இதனால் வருவாயைப் பெருக்கும் நோக்கத்தில் மத்திய அரசு இப்படியொரு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஜிஎஸ்டி அறிமுகமானது மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிட்டதாகக் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. அதிலும் கடந்த ஜூன் காலாண்டில் ஜிடிபி விகிதம் வெறும் 5 சதவிகிதமாகவும், இதே செப்டம்பர் காலாண்டில் வெறும் 4.5 சதவிகிதமாகவும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்தது. இதில் ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பின் தாக்கம் இருக்குமென்பதே பலரின் வாதமாகவும் இருந்து வருகிறது.
எனினும் ஜிஎஸ்டியின் தாக்கம் விரைவில் குறைந்து பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவரான பிபெக் தெப்ராய் முன்னர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் ஒரே விதமான வரி விதிப்பு நடைமுறையைக் கொண்டுவரும் நோக்கத்தில், கடந்த 2017ம் ஆண்டின் ஜூலை மாதம் மத்திய அரசால் புதிய சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் அனைத்துப் பொருட்கள், சேவைகளுக்கும் வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது.
ஏற்கனவே ஜிஎஸ்டி வரி வசூலானது ஒவ்வொரு மாதமும் 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வரி வசூல் செய்ய மத்திய அரசு முதலில் இலக்கு நிர்ணயம் செய்தது. ஆனால் அதை விடக் குறைவான அளவில் தான் தற்போது வரி வசூல் இருந்து வருகிறது.
அதிலும் நாட்டில் நிலவி வரும் மந்த நிலையிலும் பொருளாதார வளர்ச்சி இவ்வாறு இலக்கு நிர்ணயித்துள்ளது சாத்தியமானதா? இதை அடைய முடியுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications