டெல்லி: மத்திய அரசுக்கு எல்லா பக்கமும் அடிமேல் அடி விழுந்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக உற்பத்தி துறையில் வீழ்ச்சி, ஆட்டோமொபைல் துறையில் வீழ்ச்சி என எந்தத் துறை எடுத்தாலும் வீழ்ச்சி கண்டு வருகிறது.
இதன் காரணமாக ஜிஎஸ்டி வசூலும் குறைந்து கொண்டே வந்தது. அதிலும் தொடர்ந்து சில மாதங்களாகவே 1 லட்சம் கோடி ரூபாய்க்கு கீழ் வசூலாகியது.

இவ்வரி அமலுக்கு கொண்டு வரப்பட்ட சில மாதங்களில், மாதம் 1 லட்சம் கோடி ரூபாயை வசூல் தாண்டியது. ஆனால் கடந்த சில மாதங்களாக நாட்டில் நிலவி வரும் மந்த நிலையின் எதிரொலியாக 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டவே இல்லை.
கடந்த செப்டம்பர் மாதத்தில் 91,916 கோடி ரூபாயாக வசூல் செய்திருந்தது. அதுவும் இந்த வசூல் தொகையானது கடந்த 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகக்குறைந்த வசூல் என்றும் கூறப்பட்டது. எனினும் நவம்பர் மாதத்தில் 1.03 லட்சம் கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் ஒருங்கிணைந்த வரி விதிப்பு முறையான சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் பொருளாதார மந்தநிலையால் கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த நிலையில், கடந்த நவம்பர் மாதத்திலிருந்து அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இது நவம்பரில் ஜிஎஸ்டி வரி வருவாய் ஒரு லட்சத்து 3 கோடி ரூபாயாக உயர்ந்தது. இதுவே கடந்த டிசம்பர் மாதத்திலும் ஜிஎஸ்டி வரி வருவாய் 1.03 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டு டிசம்பர் 2018ல் 94,726 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த 1.03,184 கோடி ரூபாய் மொத்த ஜிஎஸ்டி வருவாயில் மத்திய ஜி.எஸ்.டி. 19,962 கோடி ரூபாய் என்றும், மாநில ஜிஎஸ்டி 26,792 கோடி ரூபாயும், இதே ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வருவாய் 48,099 கோடி ரூபாய் எனவும், இதுவே கூடுதல் செஸ் வரி 8,331 கோடி ரூபாய் என வசூலாகியுள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications