கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் செப்டம்பர் மாதம் லக்னோவில் நடைபெற்றது.
அப்போது பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. அதில் ஐஸ்கிரீம் உள்ளிட்ட உணவு பொருட்களை டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கு 5% வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால் ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் அல்லது விற்பனை நிலையங்களுக்கும் 5 சதவீத வரி தானா? என்ற கேள்வி பல தரப்பில் இருந்தும் எழுந்தது.

இந்த நிலையில் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய நிதியமைச்சகம், விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம்களை விற்பனை செய்யும் அல்லது பார்லர்களுக்கு சேவை வழங்கும் நிறுவனமாக கருத முடியாது.
ஏனெனில் அவர்கள் எந்தவித சமையலிலும் ஈடுபடுவதில்லை. ஆனால் ஐஸ்கிரீம் என்ற ஒரு பொருளை மட்டும் விற்பனை செய்கின்றனர். அவர்கள் சேவையை வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளது. இதனால் ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் பார்லர்கள் அல்லது விற்பனை நிலையங்களுக்கு ஐஸ்க்ரீம்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி பொருந்தும் என விளக்கமளித்துள்ளது.
எனினும் உணவகங்களில் இருந்து உணவு டெலிவரி செய்யும் சேவை நிறுவனங்களுக்கு, உணவகங்களை போல 5 சதவீத ஜிஎஸ்டி வரி பொருந்தும் என்றும் விளக்கமளித்துள்ளது.
மொத்தத்தில் ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் விற்பனை நிலையங்கள் அல்லது ஐஸ்கிரீம் பார்லருக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
சமீப காலமாகவே எரிபொருள் விலையானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர வேண்டும் என பலதரப்பில் இருந்தும் கோரிக்கை விடுத்து வரப்பட்டு வரும் நிலையில், இது குறித்த எந்த அறிவிப்புகளும் வரவில்லை.
மாறாக பல மாநில அரசுகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதற்கு விலக்கு அளிக்கப்பட்டது. இது மத்திய மாநில அரசுகளின் வருவாயை கணக்கில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனினும் இது குறித்து பரிசீலிப்பதாக கூறியிருந்தது. உண்மையில் தற்போது தொடர்ந்து அதிகரித்து வரும் எரிபொருள் விலைக்கு மத்தியில் வரியை குறைத்தாலே எரிபொருட்கள் விலையானது குறையும் என்பது மறுக்க முடியாத உண்மையே. ஆக இதனை அரசு ஏற்க வேண்டும் என்பதே சாமனியர்களின் கோரிக்கையாக இருந்து வருகின்றது.


Click it and Unblock the Notifications