தங்கத்தை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையும் உயர்கிறதா? இனி வரும் நாட்கள் மோசமாக இருக்கும் – கோடக் உதய்

ஈரான் போர் இந்தியாவில் தன்னுடைய கடுமையான தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கிவிட்டது. இரண்டு மாத காலமாக ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு கச்சா எண்ணெய் விநியோகம் மற்றும் எல்பிஜி வினியோகம் தடைப்பட்டு இருக்கிறது. இதனால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது.

மத்திய அரசு வேறு நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்து வருகிறது. இருந்தாலும் நிலைமை சற்று மோசம் அடைவதாகவே தெரிகிறது. ஏனெனில் ஈரான் போர் தற்போது முடிவுக்கு வருவதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை. இந்த நிலை இப்படியே நீடிக்கும் போது இந்தியா இன்னும் சில மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அஞ்சப்படுகிறது. ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்கள் பெட்ரோல் , டீசலை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் , முடிந்த அளவு வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும் , பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு தயாராக வேண்டும், மக்கள் தங்கம் வாங்குவதை நிறுத்த வேண்டும் என இரு தினங்களுக்கு முன்னர் கோரிக்கை வைத்திருந்தார்.

தங்கத்தை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையும் உயர்கிறதா? மோசமான நாட்களின் தொடக்கம் – கோடக் உதய்

மத்திய அரசு அடுத்த கட்டமாக பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுக்கப் போவதற்கான ஒரு ஆரம்ப புள்ளி தான் பிரதமர் மோடியின் இந்த வேண்டுகோள். மோடி அறிவித்த இரண்டு தினங்களில் மத்திய அரசு மக்கள் தங்கம் வாங்குவதை குறைக்கும் பொருட்டு தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தி இருக்கிறது. இந்த சூழலில் கோடக் நிறுவனத்தின் தலைவரான உதய் கோடக் இந்திய மக்களுக்கு மிக முக்கியமான ஒரு எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.

Also Read

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் ஈரான் போரின் தாக்கத்தை கடந்த இரண்டு மாதங்களாக இந்தியா பெரிய அளவில் உணரவில்லை குறிப்பாக பெட்ரோல் டீசல் விலை மாறவில்லை. ஆனால் இனிவரும் நாட்கள் மக்களுக்கு கடினமானதாக இருக்கும் என தெரிவித்திருக்கிறார். கடினமான நாட்கள் வருகின்றன மக்கள் அதனை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என அவர் கூறியிருக்கிறார். அதாவது எண்ணெய் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவிலான நஷ்டத்தை சந்தித்திருக்கின்றன இனிவரும் நாட்களில் நிலைமை இன்னும் சவாலானதாக இருக்கப்போகிறது என கூறியிருக்கிறார்.

தங்கத்தை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையும் உயர்கிறதா? மோசமான நாட்களின் தொடக்கம் – கோடக் உதய்

இந்தியாவும் இந்திய மக்களும் மோசமான காலத்திற்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கூறியிருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதாவது ஈரான் போரின் தாக்கம் இந்தியாவில் பல்வேறு பொருட்களின் விலைவாசிகளை உயர்த்தப் போகிறது. எனவே பொதுமக்கள் அவற்றுக்கு தயாராக இருக்க வேண்டும் என்பதையே இவர் மறைமுகமாக கூற வருகிறார். முதல் கட்டமாக மத்திய அரசு மக்கள் தங்கம் வாங்குவதை குறைக்க வேண்டும் என்பதற்காக தங்கம் வெள்ளி மீதான இறக்குமதி வரியை குறைத்து இருக்கிறது. கூடிய விரைவில் பெட்ரோல், டீசல் விலையும் உயர்த்தப்பட இருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் போது நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய காய்கறி தொடங்கி பல்வேறு பொருட்களின் விலைவாசியும் பல மடங்கு உயரும். ஏனெனில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் ஒரு பொருளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்வதற்கான செலவு கூடுகிறது. எனவே பல்வேறு பொருட்களின் விலை உயர்வது நிச்சயம். திடீரென மக்கள் அதிர்ச்சி அடையாமல் தற்போது இருந்தே கடினமான காலங்களுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என உதய கோடக் கூறி இருக்கிறார் அதுவும் கூடிய விரைவில் அதை வரப்போகிறது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+