முன்னணி இ-காமர்ஸ் தலங்களில் ஒன்றாக ஃபிளிப்கார்ட் உள்ளது. இந்நிலையில் மும்பையின் மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் ஃபிளிப்கார்ட் இந்தியா மற்றும் அதன் விற்பனையாளர் ஒருவருக்கு ரூ.10,000 அபராதம் விதித்துள்ளது. ஒரு பெண் வாடிக்கையாளர் ஃபிளிப்கார்ட்டில் உணவு பொருளை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவர் பெற்ற உணவுப் பொருள் தரமற்றதாக இருந்துள்ளது. அந்தப் பெண் அதை திருப்பி அனுப்ப முயன்றுள்ளார். ஆனால் அப்பெண்ணுக்கு திருப்பி அனுப்பும் ஆப்ஷன் எதுவும் காண்பிக்கப்படவில்லை.
கூர்கானைச் சேர்ந்த தருணா ராஜ்புத் என்ற பெண் ஃபிளிப்கார்ட் இந்தியாவில் 4,641 ரூபாய்க்கு 13 பாட்டில்கள் ஹெர்பாலைஃப் நியூட்ரிசன் பிரெஷ் எனர்ஜி மிக்ஸ்-ஐ ஆர்டர் செய்துள்ளார். இந்த மிக்ஸ் ஃபிளிப்கார்ட் விற்பனையாளரான தீபக் காஷ்யப் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி அன்று இந்த ஹெல்த் மிக்ஸ் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அதை பிரித்துப் பார்த்தபோது தருணா சந்தேகம் அடைந்துள்ளார். ஏனெனில் அவர் இதற்கு முன்பு வாங்கிய ஹெல்த் மிக்ஸ் நிறம் அல்லாமல் வேறு நிறத்தில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏற்கனவே இந்த ஹெல்த் மிக்ஸ்சை வாங்கி பயன்படுத்தி இருப்பதால் வழக்கத்திற்கு மாறான நிறத்தைப் பார்த்து சந்தேகம் அடைந்த தருணா லேபிளை பார்த்துள்ளார். லேபிளில் எந்த வித QR குறியீடும் இல்லை என்று கூறப்படுகிறது.
எனவே வந்திருக்கும் ஹெல்த் மிக்ஸ் போலியானது என்பதை அறிந்து கொண்ட தருணா அதை திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளார். ஆனால் இது தொடர்பான எந்த கோரிக்கையும் ஃபிளிப்கார்ட் இந்தியா ஏற்கவில்லை. "நோ ரிடர்ன் பாலிசி" என்று அந்த பொருளுக்கு கீழ் குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் தருணா ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவையுடன் பேசியுள்ளார்.
அதோடு பல்வேறு செய்திகளையும் அனுப்பியுள்ளார். அவரது புகாருக்கு ஃபிளிப்கார்ட் தரப்பில் திருப்திகரமான பதில் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் நீதிமன்றத்தை தருணா அணுகினார். தனக்கு வழங்கப்பட்ட ஹெல்த் மிக்ஸ் தரமற்றது என்றும், ஃபிளிப்கார்ட் இந்தியா அதைத் திருப்பி வாங்க மறுக்கிறது என்றும், நியாயமற்ற வர்த்தக நடைமுறையை கடைபிடிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
இந்த விஷயம் குறித்த விசாரணையின் போது ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவையுடன் தருணா பேசிய செய்திகள் மற்றும் புகைப்படங்கள் குறித்தும் காண்பித்துள்ளார். இதை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் விற்பனையாளர் மற்றும் ஃபிளிப்கார்ட் இந்தியாவின் சேவையில் குறைபாடு இருப்பதை கண்டறிந்தது.
மனுதாரர் தரப்பில் தீங்கு விளைவிக்கும் பொருட்களின் ஆதாரம் வழங்கப்படவில்லை. டெலிவரி செய்யப்பட்ட தயாரிப்பு போலியானது என்பதை நிரூபிக்க தவறியதால் ரூ.50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கூறிய பெண்ணின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனால் அக்டோபர் 21, 2023-ஆம் ஆண்டு நிலவரப்படி 9 சதவீத வட்டியுடன் ரூ.4641 ரூபாயை திருப்பித் தருமாறு ஃபிளிப்கார்ட் நிறுவனம் மற்றும் இதை விற்பனை செய்த விற்பனையாளருக்கு அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications