இந்தியாவில் ஜிஎஸ்டி வரி முறையில் தற்போது நான்கு வரி விகிதங்கள் உள்ளன - 5%, 12%, 18%, மற்றும் 28%. இவற்றில் 12 சதவீத வரி அடுக்கை நீக்கி, மூன்று அடுக்குகளாக குறைக்கும் திட்டத்தை ஜிஎஸ்டி கவுன்சில் பல மாதங்களாக ஆலோசனை செய்து வரும் வேளையில், இதற்கு விரைவில் விடிவுகாலம் பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய மக்களின் மாத சம்பளத்தில் பெரும் பகுதி வருமான வரிக்கும், ஜிஎஸ்டி-க்கும் செல்கிறது என மக்கள் புலம்பி வரும் வேளையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த சில மாதங்களாகவே வரி பலகையை மறுசீரமைப்பு செய்ய திட்டமிட்டு வருகிறது. இந்த மாற்றம், வரி முறையை எளிமையாக்கவும், பொருட்கள் மற்றும் சேவைகளின் வரி விகிதங்களை மறுசீரமைக்கவும் உதவும்.

ஜிஎஸ்டி கவுன்சில் என்பது மத்திய நிதியமைச்சர் மற்றும் மாநில நிதியமைச்சர்கள் அல்லது மூத்த அமைச்சர்களை உள்ளடக்கிய மறைமுக வரி முறையின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பாகும். இந்த கவுன்சிலின் கூட்டம் கடைசியாக 2024 டிசம்பரில் கூடியது, மேலும் அடுத்த கூட்டம் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த கூட்டத்தில், ஜிஎஸ்டி வரி பலகையில் 12 சதவீத வரி அடுக்கு நீக்குவது குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
12 சதவீத வரி பலகை நீக்கம்: ஜிஎஸ்டி வரி விகித மறுசீரமைப்பு குறித்து இதுவரையில் நடந்த பல்வேறு கட்ட ஆலோசனை கூட்டங்களை நடத்திய அமைச்சர்கள் குழுவுக்கு (GoM) ஆலோசனை வழங்கும் அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள், 12 சதவீத வரி அடுக்கு தற்போது பெரிய அளவில் பொருத்தமற்றதாக உள்ளதாக கருதுகின்றனர்.
இதனால் இந்த 12 சதவீத அடுக்கில் உள்ள பொருட்கள் மற்றும் சேவைகளை 5% அல்லது 18% வரி அடுக்குகளுக்கு மாற்றப்பட உள்ளது. இதன் மூலம் வருவாய் இழப்பு இல்லாமல் வரி முறையை எளிமையாக்குவதற்கு இது ஏற்ற வழியாக இருக்கும் என்று பரிந்துரை செய்துள்ளனர். இந்த முன்மொழிவுக்கு மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் GoM பிரதிநிதிகள் பெரும்பாலும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தான் அடுத்த கூட்டத்தில் இதுக்குறித்த அறிவிப்பை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
12 சதவீத வரி அடுக்கில் உள்ள பொருட்கள்: பால் பவுடர், கேவியர், 20 லிட்டர் தண்ணீர் பாட்டில்கள், வாக்கி-டாக்கி, கண்ணாடி லென்ஸ்கள், சீஸ், உலர்ந்த பழங்கள், உறைந்த காய்கறிகள், பாஸ்தா, ஜாம், பழச்சாறு பானங்கள், நம்கீன், கறி பேஸ்ட், மயோனைஸ், பற்பொடி, குழந்தை பாட்டில்கள், கம்பளி, குடைகள், தொப்பிகள், சைக்கிள், ரூ.1,000-க்கு கீழ் உள்ள காலணிகள், மருத்துவ கருவிகள், மற்றும் பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளன.
12 சதவீத வரி அடுக்கில் உள்ள சேவைகள்: குறிப்பிட்ட கட்டுமான பணிகள், ரூ.7,500 வரையிலான ஹோட்டல் அறைகள், விமானத்தில் எக்னாமி அல்லாது பயணங்கள், பலவகை போக்குவரத்து, மற்றும் சில தொழில்முறை சேவைகளும் இந்த அடுக்கில் அடங்கும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications