மார்ச் மாதத்தில் இந்தியாவில் பதிவான சிறப்பான பொருளாதார நடவடிக்கை காரணமாக நாட்டின் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி வசூல் இம்மாதத்தில் புதிய உயரத்தை எட்டியுள்ளது.
முதல் முறையாக மார்ச் மாதத்தில் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் வசூலிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டு உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்தார். மேலும், ஜிஎஸ்டி அமலாக்கம் செய்தது மூலம் ஏழைகளுக்கு எவ்வாறு உதவியுள்ளது என்பதையும் அவர் விளக்கினார்.

எக்ஸ் தளத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்த பதிவில் ஜிஎஸ்டி வரி அமைப்பு இந்தியாவில் கூட்டாட்சிக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்றும், வரி வருவாய் அதிகரிப்பைக் குறிக்கும் Tax Buoyancy அளவீடு ஜி.எஸ்.டி அமலாக்கம் செய்யப்படுவதற்கு முந்தைய காலகட்டத்தில் 0.72 ஆக இருந்த நிலையில், தற்போது 1.15 ஆக அதிகரித்து மாநிலங்களுக்கு அதிகாரமளித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பதிவில் மார்ச் மாதத்தில் பொருளாதார நடவடிக்கை அதிகரித்ததன் காரணமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடியைக் கடந்துள்ளது என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி ஏழைகளுக்கு எப்படி உதவியுள்ளது?: மத்திய நிதியமைச்சர் மேலும் கூறுகையில், ஜிஎஸ்டி ஏழைகளுக்கும் நன்மை பயக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும், ஜிஎஸ்டிக்கு முந்தைய காலகட்டத்தை ஒப்பிடும்போது அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளில் பலவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், பெரிய பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி ஏழைகளுக்கு வரிச்சுமையைக் குறைத்துள்ளது என நிதியமைச்சர் விளக்கம் அளித்தார். ஜிஎஸ்டிக்கு முந்தைய வரி விகிதங்களுடன் ஒப்பிடும்போது, பல அத்தியாவசியப் பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எடுத்துக்காட்டாக, ஜிஎஸ்டிக்கு முன்பு 28% வரி விதிக்கப்பட்ட தலைக்கு தேய்க்கும் எண்ணெய் மற்றும் சோப்பு போன்ற பொதுவான பொருட்களுக்கு தற்போது 18% வரி விதிக்கப்படுகிறது. மின்சார சாதனங்களுக்கான வரி 31.5%ல் இருந்து 12% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், பிராண்ட் இல்லாத உணவுப் பொருட்கள், சில உயிர் காக்கும் மருந்துகள், சுகாதாரம், கல்வி, பொதுப் போக்குவரத்து, சுகாதார நாப்கின்கள், செவிக்கருவி உதிரிப்பாகங்கள் மற்றும் வேளாண்மை சேவைகள் போன்ற பல அத்தியாவசியப் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், இது ஏழைகளுக்கு நன்மை பயக்கும் வகையில் அமைந்துள்ளது.
இதேவேளையில் இரு சக்கர வாகனங்களின் விலை உயர்வுக்கு "அதிகப்படியான கட்டுப்பாடு" மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கான உயர் ஜிஎஸ்டி வரி காரணமாக இருப்பதாக பஜாஜ் ஆட்டோ தலைமை செயல் அதிகாரி Rajiv Bajaj சமீபத்தில் கூறிய ஆட்டோமொபைல் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Click it and Unblock the Notifications