மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறும் இந்த கூட்டத்தில் முக்கிய விவாதங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏழு மாதங்களுக்கு பிறகு, இன்று புதுடெல்லில் நடைபெறவுள்ளது. கொரோனா காரணமாக இந்த கூட்டம் ஏழு மாதங்களாக நடைபெறவில்லை. இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அனைத்து மாநில நற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதில் கவனம் செலுத்தலாம்
நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், கொரோனா இரண்டாவது அலை தொற்று பரவலால் சிகிச்சைக்கான அத்திவசிய மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், தடுப்பூசிகளின் தேவை அதிகரித்துள்ளது. இந்த சூழலில் கொரோனா சிகிச்சை தொடர்பான மருந்துகளுக்கு வரி குறைப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம் சார்பில் பழனிவேல் தியாகராஜன்
இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறவுள்ள இந்த கூட்டம் பல்வேறு தரப்பில் இருந்தும், மருத்துவ உபகரணங்கள், நிவாரண பொருட்கள் சப்ளையில் ஜிஎஸ்டி வரி விகித குறைப்பை செய்ய, கோரிக்கை விடுத்து வருகின்றன. இதனையடுத்து தான் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
தடுப்பூசிக்கு ஜிஎஸ்டி ரத்து இருக்குமா?
மேலும் கொரோனா தடுப்பூசிகளுக்கு 5% ஜிஎஸ்டியை ரத்து செய்ய கோரிக்கை இருந்து வருகிறது. ஆக தடுப்பூசி உட்பட முக்கிய மருந்துகள், ஆக்சிஜன் உள்ளிட்ட சில வற்றிற்கு வரி விலக்கு அளிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வரி குறைப்பு இருக்குமா?
ஆக கொரோனா இரண்டாம் பரவலுக்கு மத்தியில் மிக முக்கிய தேவையாக இருக்கும் மருத்துவ உபகரணங்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதத்தில் வரி குறைப்பு என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி குறைக்கப்படும் பட்சத்தில் மருத்துவ உபகரணங்கள் விலை குறைய வாய்ப்பிருக்கிறது. அதோடு இந்த கொரோனா காலத்தில் இது மக்களுக்கு மிக பயனுள்ளதாகவும் இருக்கும்.
நிதியமைச்சர் கருத்து
எனினும் சமீபத்தில் ஒரு அறிக்கையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி வரியினை குறைத்தால், மருத்துவ உபகரணங்கள் விலை அதிகரிக்கலாம் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு பெட்ரோல் டீசலையும் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில், அதனை பற்றிய விவாதமும் இந்த கூட்டத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications