இந்திய பாரம்பரியத்தில் ஆரோக்கியம் நிறைந்த, உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்காத ஸ்நாக்ஸ் வியாபாரம் செய்ய விரும்புகிறீர்களா? உங்களுக்கு அமோகமான தொழில் எதிர்காலம் இருக்கிறது.
அரிசி பொரி பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. மொறுமொறுவென சுவையுடன் இருக்கும் இந்தப் பொரியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் விரும்பி சாப்பிடுவார்கள். காலை, மாலை சிற்றுண்டியாக அரிசியை சாப்பிடலாம். குளிர்காலத்தில் மாலை நேர டீக்கு இந்த அரிசி பொரி மிகவும் சுவையாக இருக்கும்.

அதுமட்டுமல்லாமல் பொரியுடன் வறுத்த கடலை சேர்த்து சாப்பிடும் பழக்கம் நம்மில் நிறைய பேருக்கு இருக்கிறது. வடஇந்தியர்கள் இந்தப் பொரியை வைத்து மசாலா பொரி, பேல்பூரி எனவும் போஹா என்ற சிற்றுண்டியையும் செய்து சாப்பிடுவார்கள். போஹா மிகவும் பிரபலமான ஸ்ட்ரீட் ஃபுட் ஆகும்.
பொரி சுவைக்கு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. காலில் தேங்கியிருக்கும் நீரை கலைத்து விடும் மருத்துவ குணம் பொரிக்கு உண்டு. பசியை போக்குவதோடு குறைந்த கலோரியைக் கொண்டிருப்பதால் உடல் எடையைக் குறைப்பவர்களுக்கு இந்த அரிசி பொரி மிகவும் ஏற்றதாகும்.
இப்படிப்பட்ட அரிசிப் பொரியை தயாரித்து விற்பனை செய்தால் வியாபாரம் அமோகமாக இருக்கும். கைநிறைய லாபத்தைப் பெறலாம். இதற்கு பெரிய அளவில் மூலதனம் தேவையில்லை. காதி மற்றும் கிராமியத் தொழில் ஆணையத் திட்டத் தகவலின்படி கிராமத்யோக் ரோஜ்கர் யோஜனா திட்டத்தின் கீழ் அரிசி பொரியை தயாரிக்கும் ஆலையை அமைக்கத் தேவைப்படும் விஷயங்களை கீழே பார்க்கலாம்.
அரிசி பொரி ஆலை திட்டத்துக்கான செலவீனம்-
நிலம்- சொந்தம்
ஷெட் கட்டுவதற்கு- 1000 சதுர அடிக்கு ரூ.2 லட்சம்
உபகரணங்களுக்கு- ரூ.1 லட்சம்
மொத்த மூலதனத்துக்கு தேவையான தொகை- ரூ. 3 லட்சம்
தொழில் மூலதனம்- ரூ.55000
மொத்த திட்டச் செலவீனம்- ரூ.3.55 லட்சம்
காதி ஆணையத்தின் திட்டக் குறிப்பின்படி முழு உற்பத்தியில் அரிசி பொரியை உற்பத்தி செய்தால் ஆண்டுக்கு 369 குவிண்டால் உற்பத்தி செய்யலாம். குவிண்டால் ரூ.1200 என்றால் ஆண்டு உற்பத்தி ரூ.4,43,000 ஆகும். காதி ஆணையத்தின்படி மதிப்பிடப்பட்ட செலவு 100 சதவீதம், 60 சதவீதம், 70 சதவீதம், 80 சதவீதமாகும்.
இதன்படி எதிர்பார்க்கப்படும் விற்பனை ரூ.5.53 லட்சம், ரூ.3.87 லட்சம், ரூ.4.43 லட்சம் முறையே 100 சதவீதம், 60 சதவீதம், 70 சதவீதத்துக்கு இருக்கும்.
மொத்த லாபம் - ரூ.1.10 லட்சம், ரூ.66,450, ரூ,77,530, ரூ.88,600 முறையே 100 சதவீதம், 60 சதவீதம், 70 சதவீதம், 80 சதவீதத்துக்கு இருக்கும்.
எதிர்பார்க்கும் நிகர லாபம்- ரூ.91,000, ரூ,46,000, ரூ.58,000, ரூ,69,000 முறையே 100 சதவீதம், 60 சதவீதம், 70 சதவீதம், 80 சதவீதத்துக்கு இருக்கும்.


Click it and Unblock the Notifications