சில காலமாகவே உணவுப் பணவீக்கம் அதிகரித்து உணவுப்பொருட்களின் விலை அதிகரித்ததை பார்த்தோம். இது சாமானிய மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது. ஆனால் தற்போது ராபி பயிர்களின் விதைப்பில் ஏற்பட்ட முன்னேற்றம், இயல்பை விட அதிகமாக பெய்த கனமழை போன்ற சாதகமான சூழ்நிலையின் காரணமாக அடுத்து வரும் 3 முதல் 4 மாதங்களில் தற்போதைய நிலையை காட்டிலும் உணவுப் பணவீக்கம் கடுமையாக குறையும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் தானியங்கள் மற்றும் சமையல் எண்ணெயின் தொடர் விலை உயர்வு பணவீக்கத்தை இன்னும் அதிகரிக்கச் செய்யும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக பிறப்பொருட்களின் விலையும் ஏற்றங்களுக்கு உட்படும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர் ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் 8.4 சதவீதமாக இருந்த பணவீக்க விகிதம் 2024 முதல் 2025 நிதியாண்டின் 4-வது காலாண்டில் 6 சதவீதமாக குறைந்தது.

2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கோதுமையின் சில்லறை பணவீக்கம் 2.31 சதவீதமாக இருந்தது. ஆனால் 2024-ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் 7.84 சதவீதமாக அதிகரித்தது. குறைந்தபட்ச ஆதரவு விலையின் உயர்வு மற்றும் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களின் கிடங்குகளில் கோதுமை இருப்பு குறைவாக இருந்த காரணங்களினால் தேவை அதிகரித்து விலை உயர்ந்தது.
குளிர்காலங்களில் அறுவடை செய்யப்படும் ராபி பயிர்களில் தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றின் விதைப்பு அதற்கு முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் அதிகமாக உள்ளது. இதன் காரணமாகவும் இனிவரும் நாட்களில் ராபி பயிர்களின் விலை குறைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை கோதுமை, பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்ற ராபி பயிர்களுக்காக விதைக்கப்பட்ட நிலத்தின் மொத்த பரப்பளவு 6.4 மில்லியன் ஹெக்டேர் என்று வேளாண் தரவுகள் தெரிவிக்கின்றன. இது கடந்த ஆண்டில் 63.74 மில்லியன் ஹெக்டேராக இருந்தது.
இந்த வருடத்திற்கு மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் ராபி பயிர்களின் அறுவடை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை பயிர் வளர்ச்சி சிறப்பாக இருப்பதாகவும் சில அதிகாரிகள் கூறியுள்ளனர். இன்றைய நிலவரப்படி தக்காளியில் சில்லற்றின் விலை கிலோவுக்கு ரூ. 20 ரூபாயாகவும், வெங்காயத்தில் சில்லற்றின் விலை 30 ரூபாயாகவும், உருளைக்கிழங்கின் விலை 20 ரூபாயாகவும் குறைந்துள்ளன.
இது முன்பு 40 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. இனிவரும் நாட்களில் இவை மேலும் குறையும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். விதைப்பில் முன்னேற்றம் இருப்பதை கருத்தில் கொண்டு ராபிப் பயிரின் வரத்து அதிகமாக இருக்கும், இது சற்று சாதகமான சூழலை உருவாக்கலாம் என பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications