மார்ச் மாதத்திற்கான மொத்த விலை பணவீக்க தரவுகளை நேற்று மத்திய அரசு வெளியிட்ட நிலையில், மாலையில் சில்லறை பணவீக்க அளவுகளை வெளியிட்டது. உணவு பணவீக்கம் குறைந்துள்ளது என்பதை மொத்த விலை பணவீக்கத்திலேயே பார்த்தோம், இந்த நிலையில் உணவு பணவீக்கம், சில்லறை பணவீக்கத்தில் பெரும் பங்கீட்டை கொண்ட நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து குறைந்து வருவது மூலம் இது நடந்துள்ளது.
மத்திய அரசு நேற்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, மார்ச் மாதத்தில் நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.34% ஆக குறைந்துள்ளது. இது பொருளாதார வல்லுநர்கள் கணித்த 3.60% ஐ விடக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 3.34 சதவீத பணவீக்கம் என்பது 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு பதிவான மிகக் குறைவான அளவீடு என்று மத்திய அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிப்ரவரி மாத சில்லறை பணவீக்கம் 3.61% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் மார்ச் மாதத்தில் வருடாந்திர அடிப்படையில் 2.05 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த ஜனவரி மாதத்தில் பதிவான 2.38 சதவீதத்திலிருந்து பெரிய அளவில் குறைந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவை மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டு பெரும்பாலான மாதங்களில் உணவுப் பொருட்களின் விலை விண்ணைத்தொடும் அளவுக்கு உயர்ந்திருந்தது. ஆனால், சமீபத்திய மாதங்களில் உணவுப் பொருட்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் மக்கள் விலைவாசி சுமையில் இருந்து தப்பித்துள்ளனர், இதுதான் தற்போது ஒட்டுமொத்த பணவீக்கம் குறைந்ததற்கு முக்கிய காரணம்.
மார்ச் மாதத்தில் உணவுப் பணவீக்கம் 2.69% ஆக குறைந்துள்ளது. இது பிப்ரவரி மாதத்தில் 3.75% ஆக இருந்தது. மேலும், மார்ச் மாத உணவுப் பணவீக்கம் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு மிகக் குறைவானது. குறிப்பாக, காய்கறிகளின் விலை ஆண்டுக்கு ஆண்டு 7.04% குறைந்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் காய்கறிகளின் விலை 1.07% அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் சராசரிக்கும் அதிகமான பருவமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது விவசாய உற்பத்தியையும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியையும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. அதே நேரத்தில் உணவு பொருட்களின் விலை நிலை தொடர்ந்து குறைவாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.
உணவு மற்றும் எரிசக்தி போன்ற நிலையற்ற பொருட்களைத் தவிர்த்து உள்நாட்டு தேவையை சரியாக அளவிடும் கோர் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 4.1% ஆக லேசாக உயர்ந்துள்ளது. இது முந்தைய மாதத்தில் 3.9% முதல் 4% வரை இருந்தது என்று இரண்டு பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக, சில்லறை பணவீக்கம் குறைந்துள்ளது பொருளாதாரத்திற்கு சாதகமான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் கோர் பணவீக்கம் லேசாக உயர்ந்துள்ளது உள்நாட்டு சந்தையில் டிமாண்ட் அதிகமாக இருக்கும் தன்மையை காட்டுகிறது. ரிசர்வ் வங்கி இந்த சாதகமான சூழ்நிலையை பயன்படுத்தி வட்டி விகிதத்தை மேலும் குறைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் என்ற அச்சம் நிலவும் நிலையில், இந்த பணவீக்க குறைவு ரிசர்வ் வங்கிக்கு வட்டி விகிதத்தை மேலும் குறைப்பதற்கு வாய்ப்பளித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications