சென்னையில் தொடர்ந்து ஏற்றத்திலேயே இருந்த ஆபரண தங்கத்தின் விலை இன்றைய தினம் குறைந்து இருக்கிறது. செப்டம்பர் மாதம் முழுவதுமே தங்கம் விலை பல வரலாறு காணாத உச்சங்களை எட்டியது . தங்கம் விலை செப்டம்பர் மாதத்தில் மட்டும் சவரனுக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் உயர்வு கண்டது .
தங்கம் விலை: அக்டோபர் மாதத்திலாவது விலை குறையும் என மக்கள் காத்திருந்தனர். ஆனால் அக்டோபர் ஒன்றாம் தேதியே அதிரடியாக தங்கம் விலை உயர்வு கண்டது . அக்டோபர் ஒன்றாம் தேதி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 10950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இரண்டாம் தேதி அன்று எந்த ஒரு மாற்றமும் இல்லை. இந்த சூழலில் இன்றைய தினம் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து இருக்கிறது.

இன்று ஒரு சவரன் எவ்வளவு?: சென்னையில் பொருத்தவரை அக்டோபர் 3ஆம் தேதியான இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம் 10,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தினம் ஒரு சவரன் 87 , 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரு சவரன் 880 ரூபாய் விலை குறைந்திருக்கிறது . இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் இன்று சென்னையில் 86,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது .
இது தான் சான்ஸ்: தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 880 ரூபாய் குறைந்திருப்பது மக்களுக்கு சற்றே நம்பிக்கையை ஏற்படுத்தி தந்திருக்கிறது . தங்கம் வாங்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பவர்கள் இந்த விலை குறைவை பயன்படுத்திக் கொண்டு தங்கத்தை வாங்க வேண்டும் என முதலீட்டு நிபுணர்கள் அறிவுரை வழங்குகின்றனர் .
24 கேரட் தங்கம்: சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கம் விலை குறைந்திருக்கிறது. ஒரு கிராம் நேற்று 11,946 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 120 ரூபாய் விலை குறைந்து 11,826 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 960 ரூபாய் விலை குறைந்திருக்கிறது. நேற்று 95 ,568 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 94 , 608 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
18 கேரட் தங்கம் விலை: 18 கேரட் தங்கமும் இன்று விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 85 ரூபாய் விலை குறைந்து 8,980 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் என்பது 680 விலை குறைந்து 71 , 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி: நேற்றைய தினம் 164 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் வெள்ளி இன்று கிராமுக்கு 3 ரூபாய் விலை குறைந்து 161 ரூபாய்க்கு விற்கப்படுகிறது . ஒரு கிலோ வெள்ளியை பொறுத்த வரை 3000 ரூபாய் விலை குறைந்து 1,61,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்துக்கு நிகராக போட்டி போட்டுக்கொண்டு வெள்ளியின் விலையும் உயர்ந்து வந்த நிலையில் வெள்ளி விலை இன்று ஒரே நாளில் கிராமுக்கு 3 ரூபாய் குறைந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications