தங்கம் விலை உயர்வு இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதுமே இதைப்பற்றி தான் தற்போது பரபரப்பாக பேசி வருகின்றனர். பாதுகாப்பான முதலீடு என்பதால் பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்படும் போது தங்கத்தின் விலை உயர்வது வழக்கம் தான். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக தங்கத்தின் விலை நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
தங்கம் விலை: உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வு முதலீட்டாளர்களை ஆடிப் போக செய்திருக்கிறது . முதன்முதலாக ஸ்பாட் கோல்ட் ஒரு அவுன்ஸ் (28.34952 கிராம்) விலை சர்வதேச சந்தையில் 3900 டாலர்களை (3.46 லட்சம் ரூபாய்) கடந்திருக்கிறது. இந்திய நேரப்படி காலை 10:22 மணி அளவில் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை என்பது 3940 டாலர்களை எட்டிவிட்டது . ஒரே நாளில் உலக சந்தையில் தங்கத்தின் விலை 1.35% உயர்ந்துள்ளது.

ஓராண்டில் விலை: கடந்த 30 நாட்களில் மட்டும் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 250 டாலர்கள் உயர்ந்திருக்கிறது ஓராண்டு காலத்தில் 1243 டாலர்கள் சதவீதத்தில் பார்த்தால் கிட்டத்தட்ட 47 சதவீதம் தங்கம் விலை என்பது உயர்வு கண்டிருக்கிறது. அமெரிக்க சந்தையில் யுஎஸ் கோல்ட் பியூச்சர்ஸ் 3926 டாலர்கள் வரை உயர்ந்து வர்த்தகமானது.
ஏன் தங்கம் விலை உயர்கிறது?: ஏற்கனவே சர்வதேச பொருளாதார சூழல்கள் சொல்லும்படியாக இல்லை . அமெரிக்க பொருளாதாரம் மந்தமாக இருக்கிறது .வேலை வாய்ப்பு சந்தை மிக மோசமானதாக இருக்கிறது. உலக அளவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடுத்த வர்த்தக மோதல்கள் பல்வேறு பொருளாதார நிலையற்ற தன்மைகளை ஏற்படுத்தி விட்டன . இது தவிர அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் வங்கிகள் வட்டி விகிதங்களை குறைத்து விட்டன.
எனவே பங்குச்சந்தையில் லாபம் இல்லை, பத்திரங்களில் லாபம் இல்லை என எண்ணக்கூடிய முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தை தொடர்ந்து தங்கத்தின் பக்கமே திருப்பி விடுகின்றனர். இதனால் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரித்து தங்கத்தின் விலை உயர்கிறது. இது தவிர பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் போட்டி போட்டுக் கொண்டு தங்கத்தை வாங்கி வைக்கின்றன. இந்த காரணங்களுக்கெல்லாம் மத்தியில் அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் எடுத்த நடவடிக்கையும் மற்றொரு காரணமாகியுள்ளது.
டிரம்பும் ஒரு காரணம்: டிரம்ப் அரசு செலவினங்களுக்கான நிதி மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாமல் போயிருக்கிறது. இதன் காரணமாக அமெரிக்க அரசாங்கம் முடங்கி இருக்கிறது. லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் இருக்கின்றனர். இப்படி அமெரிக்க அரசாங்கத்தில் நிலவ கூடிய இந்த நிச்சயமற்ற தன்மை மற்றும் அண்மையில் அமெரிக்க மத்திய வங்கியின் ஆளுநர் ஸ்டீபன் மிரான் மேலும் ஒரு வட்டிக் குறைப்பு நடவடிக்கை இருக்கும் என வெளியிட்ட அறிவிப்பு ஜெட் வேகத்தில் தங்கம் விலையை உயர்த்துகிறது.
இந்தியாவில் ஏன் உயர்கிறது?: 2024 ஆம் ஆண்டில் வெறும் 27 சதவீதம் உயர்ந்த தங்கத்தின் விலை 2025 ஆம் ஆண்டில் பத்து மாதங்களிலேயே சுமார் 49 சதவீதம் உயர்ந்திருக்கிறது தங்கம் என்றால் தங்க பார் , நாணயங்கள் , நகைகள் என மட்டும் இல்லாமல் ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்வதும் அதிகரித்து இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தின் விலை உயர்வுக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது இந்த பண்டிகை காலம். சர்வதேச காரணிகள் மட்டும் இல்லாமல் பண்டிகை காலத்தில் மக்கள் அதிக அளவில் தங்கம் வாங்குவதால் அதற்கான டிமாண்ட் அதிகரித்து விலை உயர்ந்திருக்கிறது.
என்ன நடந்தால் விலை குறையும்: பல்வேறு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக மோதல்கள், குறிப்பாக டிரம்ப் தொடங்கிய வர்த்தக போர்கள் முடிவுக்கு வர வேண்டும், மத்திய வங்கிகள் வட்டி குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும், புவிசார் மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும், மத்திய வங்கிகள் தங்கம் வாங்கி இருப்பு வைப்பதை குறைக்க வேண்டும், பத்திரங்களின் வட்டி விகிதம் உயர வேண்டும், அமெரிக்க பொருளாதாரம் சீரடைய வேண்டும், உலக பொருளாதார நிலையற்ற தன்மை முடிவுக்கு வர வேண்டும். இவை அனைத்தும் நடந்தால் மட்டுமே தங்கம் விலை குறையும்.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்



Click it and Unblock the Notifications