2026ஆம் ஆண்டு இந்திய பங்குச்சந்தையில் ஏற்பட்ட மோசமான சரிவுக்கு மிக முக்கியமான காரணமாக இருந்த வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் தற்போது மீண்டும் இந்திய சந்தையை தேடி வந்து முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். FII முதலீட்டாளர்கள் இந்த வாரம் மட்டும் சுமார் 5 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்து அசத்தியுள்ளனர்.
குறிப்பாக கடந்த 2 நாள் வர்த்தகத்தில் மட்டும் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் சந்தை மதிப்பு இந்த வாரத்தில் மட்டும் 20 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து மொத்த சந்தை மதிப்பு 502 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இந்த வருடம் ஈரான் போர் துவங்கிய நாளில் இருந்து கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரணமாக இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து, தொழிற்துறை உற்பத்தி, நுகர்வின் அளவும் வேகமாக குறைந்து வந்த காரணத்தால் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வேகமாக தங்களுடைய முதலீட்டை வெளியேற்றி வந்தனர்.
இதற்கு ஏற்றார் போல் உலகளாவிய சந்தையில் ஏஐ, கிளவுட், டேட்டா சென்டர் என புதிய முதலீட்டு பிரிவு திறக்கப்பட்டு மொத்த முதலீட்டையும் உறுஞ்சியது.
இதுமட்டுமா ரிஸ்க் எடுக்க தயங்கும் முதலீட்டாளர்களுக்கு நிலையான மற்றும் அதிகமான லாபத்தை அளிக்கும் வண்ணம் அமெரிக்க பத்திர சந்தையில் மிகவும் அரிய வாய்ப்பாக பத்திர சந்தை மீதான முதலீட்டில் 5.2 சதவீதம் வரையிலான வட்டி வருமானம் கிடைக்கும் வாய்ப்பு உருவானது.
இதனால் உலகளவில் வளரும் சந்தைகளில் இருக்கும் முதலீடுகள் அனைத்தும் ஏஐ மற்றும் பத்திர சந்தைக்கு திரும்பியது. இந்திய சந்தையில் இருந்து வெளியேறும் அன்னிய முதலீட்டை தடுக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் LTCG வரியை நீக்குவது குறித்து ஆலோசனை செய்து வருகிறார்.
இத்தகைய சூழ்நிலையில் அமெரிக்க தேர்தல் முடிவுகள் சந்தையில் பெரும் மாற்றத்தை உருவாக்கியுள்ளது, ஏஐ மீது ஜனநாயக கட்சி கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் என கணிக்கப்படும் காரணத்தால் அமெரிக்க, தைவான், தென் கொரிய பங்குச்சந்தையில் இருக்கும் முதலீட்டை எடுத்து இந்தியா போன்ற பாதுகாப்பான சந்தையில் முதலீடு செய்ய துவங்கியுள்ளனர் FPI முதலீட்டாளர்கள். வியாழக்கிழமை ஒரு நாளில் மட்டும் FPI முதலீட்டாளர்கள் சுமார் 15000 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியுள்ளனர்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் உருவான ஆதிக்க நிலை மாற்றத்தில் இந்திய பங்குச்சந்தையும், இந்திய முதலீட்டாளர்களும் ஜாக்பாட் அடைந்துள்ளனர். ஏஐ துறைக்குள் இந்தியா நுழையாதது பெரும் பின்னடைவாக பார்க்கப்படும் வேளையில், இந்த பின்னடைவு தற்போது இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு லாபம் அளிக்கும் விஷயமாக மாறியுள்ளது.
அமெரிக்கப் பங்குச்சந்தை வியாழக்கிழமை மிகவும் மோசமான சரிவைக் கண்டது, ஆனால் வெள்ளிக்கிழமை நிலைமை தலைகீழாக மாற்றியுள்ளது. அமெரிக்க பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் நேற்றைய மோசமான சரிவை Buy on Dip வாய்ப்பாகப் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications

