இந்திய பங்குச்சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆதிக்கம் பெரிய அளவில் குறைந்துவிட்டாலும், இப்பிரிவினரின் முதலீடுகள் சந்தையில் போக்கை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக தொடர்ந்து இருந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக இந்திய பங்குச்சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்துவந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள், செப்டம்பர் மாதம் துவங்கிய உடன் தனது வேலையை காட்ட துவங்கியுள்ளனர்.

செப்டம்பர் மாதத்தில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட உயர்வு, அமெரிக்க பத்திர முதலீட்டில் அதிகரித்த வட்டி வருமானம், ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட மாற்றம் ஆகியவற்றின் காரணமாக செப்டம்பர் மாதத்தில் 4 நாள் வர்த்தகத்தில் பெரும் தொகையை இந்திய முதலீட்டு சந்தையை விட்டு வெளியேற்றியுள்ளனர்.
அதாவது செப்டம்பர் 1-4 ஆம் தேதி வரையிலான 4 நாட்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் முதலீட்டு செய்ததை காட்டிலும் அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்து, மொத்தம் 7443 கோடி ரூபாய் அளவீலான முதலீட்டை வெளியேற்றி Net Seller ஆக மாறியுள்ளனர்.
இதேவேளையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆகஸ்ட் மாதம் இந்திய பங்குச்சந்தையில் சுமார் 29,600 கோடி ரூபாயும், ஜூலை மாதம் 20200 கோடி ரூபாய் தொகையை முதலீடு செய்து நெட் பையர்களாக உருவெடுத்துள்ளனர்.
இதற்கு முன்பு அதாவது மார்ச் முதல் ஜூன் மாதம் வரையிலான 4 மாதங்களுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்திய சந்தையில் இருந்து வெளியேற்றி வந்தனர், 2 மாத இடைவெளியில் தற்போது மீண்டும் துவங்கியுள்ளது.
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 362.57 புள்ளிகள் உயர்ந்து 76,515.43 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 24.25 புள்ளிகள் உயர்ந்து 23,897.70 புள்ளிகளை எட்டியுள்ளது. எனவே திங்கட்கிழமை வர்த்தகத்தில் பன்னாட்டு முதலீட்டாளர்களின் பங்கீடு சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு முக்கியமான காரணமாக இருக்கப்போகிறது.
செப்டம்பர் மாத 7440 கோடி முதலீட்டு வெளியேற்றம் மூலம் 2026ஆம் ஆண்டு பன்னாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 2.32 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை வெளியேற்றியுள்ளனர். இதன் மூலம் 2025ல் வெளியேற்றி 1.66 லட்சம் கோடி ரூபாய் அளவை காட்டிலும் 2026ல் முதலீட்டு அளவுகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
