நாட்டின் முதுகெலும்பாக விவசாயம் உள்ளது, சமீபகாலமாக பெரிய நிறுவனங்களில் பெரிய சம்பளத்தில் வேலை பார்த்த பல இளைஞர்கள் விவசாயத்தை ஆர்வத்துடன் செய்து வருகின்றனர். விவசாயத்திலும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று அவர்கள் நிரூபித்து வருகின்றனர். அப்படிப்பட்ட இளைஞர்களில் ஒருவர்தான் அபினவ் சிங்.
இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் அதிகப்படியான சம்பளத்தில் பணியாற்றி வந்த நிலையில, இந்த வேலையை துறந்து விட்டு இன்று சொந்த ஊரில் விவசாயம் செய்து மாதம் சராசரியாக ரூ.1,50,000 சம்பாதிக்கிறார்.

உத்தர பிரதேச மாநிலம் அசம்கர் மாவட்டத்தில் உள்ள சில்பிலா என்ற கிராமத்தை சேர்ந்தவர் அபினவ் சிங். விவசாய குடும்ப பின்னணியில் வளர்ந்த அபினவ் சிங் படிப்பை முடித்தவுடன் பிரிட்டன் நாட்டில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ரூ.80 லட்சம் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
பணம் அவருக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. குடும்பம் மற்றும் நண்பர்களால் சூழப்பட்ட நிறைவான வாழ்க்கையை விரும்பினார். இது அங்கு கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் 2014ல் பிரிட்டன் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு அவர் திரும்பினார்.
இந்தியாவில் குர்கானில் உள்ள மைக்ரோசாப்ட் அலுவலகத்தில் சேர்ந்தார். ஆனாலும் இதுவும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. சொந்த ஊரில் விவசாயம் செய்வதோடு, அங்குள்ள மக்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற விருப்பம் அவருக்குள் இருந்து கொண்டே இருந்தது.
ஒரு கட்டத்தில் விவசாயம் தான் நமக்கானது என்று முடிவு செய்த அபினவ் சிங், 2016ல் மைக்ரோசாப்ட் வேலையை ராஜினாமா செய்தார். தனது 31 வயதில் கெர்பரா (Gerbera) விவசாயத்தில் அனுபவம் பெற முடிவு செய்தார். கெர்பரா என்பது பூக்கள் கொண்ட தாவரம், உத்தர பிரதேசத்தில் திருமண காலங்களில் இந்த பூக்களுக்கு பெரிய தேவை இருக்கும்.
கெர்பரா சாகுபடி குறித்து தெரிந்து கொண்ட பின், அபினவ் சிங் தனது கிராமத்தில் 4,000 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு பாலிஹவுஸ் அமைத்தார். வங்கி கடன் ரூ.48 லட்சம் மற்றும் தனது சேமிப்பு தொகைகளையும் சேர்த்து மொத்தம் ரூ.58.16 லட்சத்தை முதலீடாக போட்டு இந்த பாலிஹவுஸை அமைத்தார்.
2012 பிப்ரவரியில் முதல் முறையாக அறுவடை செய்தார். பூ சாகுபடி விவசாயத்தை தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் அபினவ் சிங்குக்கு ரூ.18,00,000 வருமானம் கிடைத்தது. மேலும், விவசாயம், பேக்கேஜிங், போக்குவரத்து மற்றும் விற்பனை போன்ற பல்வேறு பிரிவுகளில் சுமார் 100 பேருக்கு வேலைவாய்ப்பும் வாழ்வாதாரத்தையும் வழங்குகிறது.
அபினவ் சிங் கூறுகையில், நான் முன்பு பார்த்த வேலையில் எவ்வளவு சம்பாதித்தேனோ அதனை காட்டிலும் குறைவாகவே தற்போது சம்பாதிக்கிறேன். ஆனால் மற்றவர்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்குவது, எனது சொந்த ஊரில் தனித்துவமான ஒன்றை செய்வது மற்றும் எனது குடும்பத்துடன் தங்குவது போன்ற மகிழ்ச்சியை எவ்வளவு பணத்தாலும், ஆடம்பரமான வாழ்க்கையாலும் கொடுக்க முடியாது என்று தெரிவித்தார்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications