மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரியான லத்திகா பை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனக்கு 35 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறி வழக்கு தொடர்ந்திருக்கிறார். மைக்ரோசாஃப்ட் இந்தியாவின் எக்ஸிக்யூடிவ் பிரிவு தலைவராக செயல்பட்டு வந்தவர் தான் லத்திகா பை.
இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். தற்போது அந்த வழக்கானது பெங்களூரு சிவில் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மைக்ரோசாப்ட் நிறுவனம் மன ரீதியாக தன்னை துன்புறுத்தி ராஜினாமா செய்யும் சூழலுக்கு தள்ளியதாக குற்றம்சாட்டியுள்ளார். தனக்கு எதிரான பணி சூழலை உருவாக்கி, தன் புகழுக்கு களங்கம் விளைவித்து வேலையை ராஜினாமா செய்ய வைத்தனர், எனவே மைக்ரோசாப்ட் எனக்கு 35 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

லத்திகா பை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்தியாவிற்கான வென்ச்சர் கேபிடல் பிரிவுக்கான தலைவராக செயல்பட்டு வந்தார். 2019 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவின் 100 யூனிகார்ன் நிறுவனங்கள் என்ற திட்டத்தை தொடங்கியது. இதற்கு லத்திகா பை தான் தலைமை வகித்தார். தொடக்க நிலையில் இருக்கும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கான ஒரு திட்டம் தான் இது.
மத்திய மாநில அரசுகளோடு இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டு லத்திகா பை நிதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனம் விசாரணை நடத்தியது. 2019ஆம் ஆண்டிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டு லத்திகா பை மீது எந்த ஒரு தவறும் இல்லை என கண்டறிந்தது. இதனை அடுத்து 2021 ஆம் ஆண்டில் அவருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் இரண்டாவது முறையாக லத்திகாப் பையின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை நடத்தப்பட்டது. பொதுவாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இது போன்ற விசாரணைகள் நடத்தப்படும் போது அவை பதிவு செய்யப்பட வேண்டும் ஆனால் லத்திகா பையிடம் நடத்தப்பட்ட விசாரணை பதிவு செய்யப்படவில்லை என சொல்லப்படுகிறது. இந்த விசாரணையில் நிறுவனத்தின் விதிமுறைகள் எதுவுமே கடைபிடிக்கப்படவில்லை என லத்திகா பை கூறுகிறார்.
தொடர்ந்து நிறுவனம் பல்வேறு பொறுப்புகளில் இருந்து இவரை படிப்படியாக விலக்கி இருக்கிறது இவர் பிரச்சனையை உண்டாக்குபவர் என இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது . விசாரணைகளின் போது இவர் தன்னுடைய மொபைல் போனை பயன்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட சட்டத்துக்கு விரோதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவிக்கிறார்.
மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை அதிகாரிகள் தன் மீதான விசாரணையை முறையாக நடத்தவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். கிட்டத்தட்ட 6 மாத காலம் பல முறைகளில் தான் துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்திருக்கும் அவர் தன்னுடைய புகழுக்கு களங்கம் விளைவித்து, மன ரீதியாக தன்னை துன்புறுத்தி வேலையை ராஜினாமா செய்ய வைத்தனர் என கூறியுள்ளார். தனக்கு இழைக்கப்பட்ட அநீதி, இதனால் ஏற்பட்ட வருமான இழப்பு, மன உளைச்சல் ஆகியவற்றுக்கு ஈடாக மைக்ரோசாப்ட் நிறுவனம் 35 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.
More From GoodReturns

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!



Click it and Unblock the Notifications