மும்பை: இந்திய பங்குச்சந்தையில் இருந்து கடந்த மாதத்தில் வெளிநாட்டு நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் பெரிய அளவிலான தொகையை திரும்ப பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் அக்டோபர் மாதத்தில் இந்திய பங்குச் சந்தையிலிருந்து 94,000 கோடி ரூபாயை திரும்ப பெற்றுள்ளன. அக்டோபர் மாதத்தை பொறுத்தவரை இந்திய பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடனே காணப்பட்டது.
குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்திய சந்தையில் தங்கள் வசம் இருந்த பெருமளவிலான பங்குகளை விற்று விட்டன. அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையில் 94,017 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இது முன் எப்போதும் இல்லாததை விட அதிகம் என்கின்றனர் சந்தை ஆய்வாளர்கள். நடப்பு ஆண்டிலேயே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக பங்குகளை விற்பனை செய்த மாதமாக அக்டோபர் இருக்கிறது. இந்திய பங்குச்சந்தையில் இருந்து எடுத்த தொகையை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சீன பங்குச் சந்தையில் சீன நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு முன்னதாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக 61,973 கோடி ரூபாயை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் இருந்து திரும்ப பெற்றிருந்தனர்.
கடந்த செப்டம்பர் மாதத்தில் தான் நடப்பாண்டிலேயே அதிகபட்சமாக வெளிநாட்டு நிறுவனங்கள் 57,724 கோடி ரூபாய்க்கு இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தன. தற்போது சர்வதேச அளவில் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை மாற்றி அமைப்பது ,சீன பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருவது, அமெரிக்க அதிபர் தேர்தல் மற்றும் ஈரான் இஸ்ரேல் இடையிலான சண்டை ஆகியவை காரணமாக வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களின் முதலீட்டு போக்கை மாற்றி வருகின்றன.
அமெரிக்கா அதிபர் தேர்தல் முடிவுகளை பொறுத்து இந்தியாவில் மேற்கொண்டு வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்குமா அல்லது திரும்ப பெறப்படுமா என்பது குறித்து தெரியவரும் என முதலீட்டு சந்தை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் தங்களுடைய பங்குகளை விற்பனை செய்ததால் பெஞ்ச்மார்க் குறியீடுகள் தங்களுடைய உச்சத்தில் இருந்து 8% வரை சரிவை கண்டுள்ளன.
இந்தியாவை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் அதிக மதிப்பீட்டை கொண்டிருப்பதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் விற்றுவிட்டு சீனாவில் வாங்கு என்ற கொள்கையை பின்பற்றுகின்றன. அண்மையில் தான் சீன அரசு பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இது ஒரு பாசிட்டிவான மூவாக பார்க்கப்படுகிறது. எனவே இந்திய சந்தையை விட சீன சந்தை வளர்ச்சியில் இருக்கும் என வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.
வெளிநாட்டு நிறுவனங்கள் பெருமளவிலான பங்குகளை விற்பனை செய்தாலும் உள்நாட்டை சேர்ந்த மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பிற நிறுவனங்கள் அதற்கு ஈடாக பங்குகளில் முதலீடு செய்துள்ளன என்றும் சில்லறை முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
Written by: Devika
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications