இந்தியப் பங்குச்சந்தையை விட்டு ஓடிய வெளிநாட்டு முதலீட்டாளர்கள், மீண்டும் இந்திய முதலீட்டுச் சந்தையை நோக்கி யூ-டர்ன் அடித்துள்ளனர்.
ஈரான் மீதான அமெரிக்காவின் போர் தாக்குதல் நிறுத்தப்பட்டதாக அறிவித்து, அதன் மூலம் கச்சா எண்ணெய் விலை குறைந்தது, ஏஐ தொழில்நுட்பம் மீது அமெரிக்காவின் ஜனநாயக கட்சி விதிக்கப்போகும் கட்டுப்பாடுகள் மூலம் உலகளாவிய ஏஐ துறை முதலீட்டில் ஏற்பட்ட விற்பனை, அமெரிக்கப் பத்திரங்களின் வட்டி வருமானம் குறைந்தது ஆகியவற்றின் மூலம் FPI முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையில் நவம்பர் மாதம் 9 நாளில் சுமார் 53,739 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்துள்ளனர்.

இன்று தீபாவளி பண்டிகை காரணமாகப் பங்குச்சந்தை விடுமுறை என்பதால் நாளையும், இந்த அதிரடியான முதலீடு தொடருமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
திங்கட்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 107.25 புள்ளிகள் உயர்ந்து 81,106.65 புள்ளிகளை எட்டியுள்ளது, இதேபோல் நிஃப்டி குறியீடு 58.25 புள்ளிகள் உயர்ந்து 25,044.65 புள்ளிகளை எட்டியுள்ளது.
இன்று அமெரிக்கப் பங்குச்சந்தை சரிவுடன் துவங்கியுள்ளது, நாளைய வர்த்தக துவக்கத்திற்கு மந்தநிலையை உருவாக்கும் அல்லது பன்னாட்டு முதலீட்டாளர்கள் அமெரிக்கப் பங்குச்சந்தையை விடுத்து இந்தியச் சந்தையில் அதிகளவில் முதலீடு செய்யவும் வாய்ப்புள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் நாஸ்டாக் 160 புள்ளிகளும், எஸ் & பி 500 38 புள்ளிகளும், டாவ் ஜோன்ஸ் 142 புள்ளிகளும் சரிவில் வர்த்தகமாகி வருகிறது.
நவம்பர் மாதத்தின் 9 நாட்களில் 53,739 கோடி ரூபாயை முதலீடு செய்தது மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது, காரணம் அக்டோபர் முழுவதும் 34,843 கோடியும், செப்டம்பர் மாதத்தில் 35,861 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்யப்பட்டு உள்ளது.
நவம்பர் மாத 6 வர்த்தக நாட்களில் வந்த முதலீடுகள் மூலம் 2026ஆம் ஆண்டில் மொத்த FPI முதலீடுகளின் வெளியேற்றம் 2.41 லட்சம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
ஏஐ துறை பங்குகள் விற்பனை அதிகரித்து வருவது இந்தியப் பங்குச்சந்தைக்கு ஜாக்பாட் ஆக மாறியுள்ளது. இதேபோல் இந்தியாவில் பணவீக்கம் அதிகமாக இருக்கும் போதும் நாட்டின் வளர்ச்சியில் எவ்விதமான தொய்வும் ஏற்படாதது பன்னாட்டு முதலீட்டாளர்களைக் கவரும் முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
மேலும் கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் அன்னிய முதலீடுகளின் வருகை டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வேகமாகச் சரிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications