வெளிநாட்டில் இருந்து பார்சல் வந்திருப்பதாக கூறி ரூ.80 லட்சம் மோசடி.. மக்களே உஷாரா இருங்க..!

மும்பை: நூதன முறையில் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிப்பது என்பது வாடிக்கையாகி வருகிறது. குறிப்பாக மக்களிடையே ஒரு வித அச்ச உணர்வை ஏற்படுத்தி மோசடியாளர்கள் எளிதாகி ஏமாற்றி பணம் பறிக்கின்றனர். அப்படி தான் நவி மும்பையை சேர்ந்த ஒரு மூதாட்டி 80 லட்சத்தை இழந்துள்ளார்.

ஓய்வு பெற்ற அரசு ஊழியரான 63 வயது பெண்மணி மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை பகுதியில் வசித்து வருகிறார். மார்ச் 29ஆம் தேதி இவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. தொலைபேசியில் பேசிய நபர் சர்வதேச கொரியர் சேவை நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறியுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து பார்சல் வந்திருப்பதாக கூறி ரூ.80 லட்சம் மோசடி.. மக்களே உஷாரா இருங்க..!

அந்த மூதாட்டியின் பெயரில் ஒரு பார்சல் வந்திருப்பதாகவும் அதில் கடத்தப்பட்ட பொருட்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக போலீஸிடம் தங்களது நிறுவனம் புகார் அளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அந்த மூதாட்டி இதனை மறுத்த போது, அவர் பற்றிய அடிப்படை தகவல்களை கூறியுள்ளனர். இதனால் படிப்படியாக அவர் மோசடியாளர்களின் பேச்சை நம்பியுள்ளார்.

பின்னர், இந்திய ரிசர்வ் வங்கியின் பெயரில் போலி கடிதம் ஒன்றை மோசடியாளர்கள் அனுப்பியுள்ளனர். மேலும் அமலாக்கத்துறை மற்றும் நிதித்துறை அமைச்சகம் போல கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். பின்பு, ஸ்கைப் வாயிலாக அவரை தொடர்பு கொண்டு அதிகாரிகள் போல நடித்து அவரை நம்ப வைத்துள்ளனர்.

கடத்தப்பட்ட பொருட்கள் பார்சலில் வந்திருப்பதால் அரசு அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க கூடும் எனக்கூறி அவரை அச்சப்படுத்தியுள்ளனர். இந்த சட்ட நடவடிக்கையில் இருந்து காப்பாற்ற தாங்கள் உதவி செய்வதாகவும் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

இதற்காக அவரிடம் இருந்து படிப்படியாக 80 லட்சம் ரூபாய் வரை மோசடியாளர்கள் பெற்றிருக்கின்றனர். பணம் கிடைத்த பின்னர், அவர்களிடமிருந்து பெரிதளவில் அழைப்புகள் வருவது நின்று விட்டது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த மூதாட்டி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல்துறையினர் இந்திய குற்றவியல் சட்டம் 420, 468, 471 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபர்களின் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.அண்மையில் ஒரு குறிப்பிட்ட லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறி மும்பையை சேர்ந்த வழக்கறிஞர் பெண்மணி ஒருவருக்கு அழைப்பு வந்துள்ளது.

அவரிடமும் இதேபோல 80 லட்சம் ரூபாய் தந்தால் சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்கலாம் என மோசடியாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் அவர் விழிப்புடன் இருந்ததால் இதிலிருந்து தப்பித்து விட்டார்.

இதுபோல அழைப்புகள் வரும்போது மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் அச்சப்படக்கூடாது எனவும் உடனடியாக காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+