ED நடத்திய அதிரடி வேட்டை.. புது சிக்கலில் அனில் அம்பானி.. போலி உத்தரவாதம் மூலம் ரூ.68 கோடி மோசடி..?

அனில் அம்பானி குழுமத்தைச் சுற்றியுள்ள நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணையை அமலாக்கத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது ரூ.68.2 கோடி மதிப்புள்ள போலி வங்கி உத்தரவாதம் வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று மாலை அமலாக்கத்துறையினர் நான்கு இடங்களில் திடீர் சோதனை நடத்தினர்.

இந்த இடங்கள் அனைத்தும் Biswal Tradelink Pvt Ltd எனும் நிறுவனத்துடன் தொடர்புடையவை ஆகும். இந்த நிறுவனம் தற்போது அதிகாரிகளின் அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிறுவனம் "shell companies" (பணப்புழக்கத்திற்காக மட்டும் உருவாக்கப்படும் நிறுவனங்கள்) இயக்கி வந்ததாக கூறப்படுகிறது. கூடுதலாக, கட்டணமாக போலி வங்கி உத்தரவாதங்கள் வழங்கி வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ED நடத்திய அதிரடி வேட்டை.. புது சிக்கலில் அனில் அம்பானி.. போலி உத்தரவாதம் மூலம் ரூ.68 கோடி மோசடி..?

அமலாக்கத்துறை நடத்திய விசாரணையின் தொடர்ச்சியில், Biswal Tradelink Pvt Ltd நிறுவனம் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா என்ற அரசு நிறுவனத்துக்கு ரூ.68.2 கோடி மதிப்பிலான போலி வங்கி உத்தரவாதம் வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனம், போலி வங்கி உத்தரவாதங்களுக்கு 8% கமிஷன் வசூலித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த மோசடியை நடத்தியவர்கள் State Bank of India-வின் உண்மையான இணையதளமான sbi.co.in போல வடிவமைத்துள்ளனர். இதன் மூலமாகவே, SECI உட்பட பிற நிறுவனங்களுக்கு வங்கி அனுப்பியதாக தோன்றும் போலி மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதன் மூலம், அவர்கள் உண்மையான வங்கியிலிருந்து வந்ததாக போலி தோற்றம் ஏற்படுத்தி, அரசு அமைப்புகளை ஏமாற்ற முயற்சி செய்துள்ளனர்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போதைய விசாரணையில் ஒரு முக்கிய தகவலை கண்டறிந்துள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தகவல்களின் மூலம், டெலிகிராம் மெசேஞ்சரில் உள்ள 'disappearing messages' வசதி தொடர்ந்து பயன்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. இது கண்காணிப்பை தவிர்க்கவும், உரையாடல்களை ரகசியமாக வைத்திருக்கவும் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த போலி வங்கி உத்தரவாதம், Reliance NU BESS Private Limited மற்றும் Maharashtra Energy Generation Limited ஆகிய நிறுவனங்களுக்கு இடையிலான ஒரு பண பரிமாற்றத்துக்கு ஆதரவாக பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும், அனில் அம்பானி குழுமத்துடன் தொடர்புடையவை ஆகும். இது தனிப்பட்ட நிதி மோசடியாக அல்லாமல், பெரிய நிறுவனங்கள் தொடர்புடைய பரிமாற்றங்களில் போலி ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டதாகும். எனவே, இந்த வழக்கு தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+