வீடு, வாசலை விற்று துவங்கிய பிஸ்னஸ்.. இன்று ரூ.51,000 கோடி சாம்ராஜ்ஜியமானது.. யார் இந்த அகமது..?

கேரளா: இந்திய மக்களுக்கும் நகைக்கும் இடையிலான உறவை ஒரு போதும் பிரிக்க முடியாது. இப்படி மக்களின் பிரியமான பொருளாக இருக்கும் தங்கத்தை தரமாக விற்பனை செய்து உலகின் முன்னனி நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது மலபார் கோல்டு & டைமண்ட்ஸ். இந்த வெற்றிக்கு காரணமாக இருப்பவர் எம்.பி.அகமது.

கேரளா மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் அகமது. தன்னுடைய 17 வயதிலேயே தொழில் துறையில் கால்பதித்துவிட்டார். மிளகு, ஏலக்காய் போன்ற பொருட்களை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து வியாபாரம் செய்ய தொடங்கினார். அப்போது தான் இந்தியாவில் தங்க நகைகள் மீது மக்களுக்கு இருக்கும் மோகத்தை அறிந்து கொண்டார். குறிப்பாக கேரள மக்களிடையே தங்க நகைகளுக்கு இருந்த பிரியத்தை உணர்ந்தார்.

வீடு, வாசலை விற்று துவங்கிய பிஸ்னஸ்.. இன்று ரூ.51,000 கோடி சாம்ராஜ்ஜியமானது.. யார் இந்த அகமது..?

இந்தியாவில் தங்க நகைகளின் விற்பனை குறித்து ஆய்வு செய்தார். அந்த சமயத்தில் முதலீடு அவருக்கு பெரிய பிரச்சினையாக இருந்தது. தங்க பார்களை வாங்கி நகைகளாக வடிவமைத்து தரமான முறையில் மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என முடிவு செய்தார். இதற்கான முதலீட்டுக்கு பணம் இல்லை. எனவே உறவினர்களின் உதவியை நாடினார்.

தன் வசம் இருந்த சொத்துக்களை விற்றும் உறவினர்களின் உதவியோடும் அகமது 50 லட்சம் ரூபாய் முதலீடு செய்து 1993ஆம் ஆண்டு தங்கள் ஊரின் பெயரையே பிராண்டாக கொண்டு மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் கடையை திறந்தார். கோழிக்கோட்டில் 400 சதுர அடி பரப்பளவில் இந்த நகை கடை திறக்கப்பட்டது. தரமான தங்கத்தை விற்பனை செய்ததால் மக்களிடையேயும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஒரு கடையை இரண்டு மூன்று என படிப்படியாக விரிவாகக்ம் செய்ய தொடங்கினார். கேரளாவின் பிரதான நகரங்களில் எல்லாம் மலபார் கோல்டு & டைமன்ஸின் கிளைகள் திறக்கப்பட்டன. அப்படி அண்டை மாநிலங்களிலும் கிளைகளை திறந்து படிப்படியாக வளர்ச்சி அடைந்தது இந்த நிறுவனம்.

2005ஆம் ஆண்டில் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக மாறியது. இந்தியாவில் 100% பிஐஎஸ் ஹால்மார்க் தங்கத்தை முதன்முதலில் அறிமுகம் செய்தது தங்கள் நிறுவனம் தான் என மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் கூறுகிறது. 2013ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் வருமானம் 22,000 கோடி ரூபாயாக உயர்ந்தது. 2017ஆம் ஆண்டில் 97 கிளைகளை இந்நிறுவனம் திறந்திருந்தது.

2018ஆம் ஆண்டில் ஒரே நாளில் 11 கடைகளை திறந்து புதிய சாதனை படைத்தது இந்நிறுவனம். குறிப்பாக இந்தியா தாண்டி வளைகுடா நாடுகளில் அதிக கடைகளை திறந்தது மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம். தற்போது அமெரிக்காவிலும் இந்நிறுவனம் ஒரு கிளை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறது. உலகின் 6ஆவது பெரிய நகை விற்பனை நிலையம் என்ற பெருமை கொண்டிருக்கிறது.

2023ஆம் ஆண்டில் கோழிகோட்டில் சுமார் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் உலகின் பெரிய நகை கடையை திறந்து வரலாற்றில் இடம் பிடித்தது. தற்போது உலகம் முழுவதும் 350க்கும் அதிகமான கிளைகளை கொண்டுள்ளது. 51,000 கோடி மதிப்புள்ள நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

அகமதுவை பொறுத்தவரை தரமான நகைகள் மற்றும் தனித்துவமான வடிவங்கள் என்பதில் உறுதியாக இருப்பவர், இதுவே இந்நிறுவனத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக இருக்கிறது.

Take a Poll

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+