இந்தியாவில் புத்தாண்டிலிருந்து பல்வேறு அதிரடியான மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. இந்த மாற்றங்கள் அனைத்துமே நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும் குறிப்பாக வங்கி சார்ந்த பரிவர்த்தனைகள் உள்ளிட்டவற்றில் எல்லாம் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றன. எனவே இந்த மாற்றங்களை தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கு ஏற்ப நம்முடைய நிதிகளை திட்டமிடுவது மிகச் சிறந்ததாக இருக்கும்.
வங்கி கணக்கு : இந்தியாவில் தற்போது வங்கி கணக்கு இல்லாதவர்களே இல்லை என கூறலாம். வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் 2026 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுக்கு ஒருமுறை கேஒய்சி அப்டேட் செய்வது கட்டாயமாகிறது. வங்கி கணக்குகள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்க வேண்டும் , வங்கி கணக்குகள் மூலம் உங்களுக்கு கிடைக்கக்கூடிய பரிவர்த்தனைகள் தொடர்ந்து கிடைக்க வேண்டும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்றால் உங்களுடைய வங்கி கணக்கில் கேஒய்சி அப்டேட் செய்து வைப்பது கட்டாயமாகும். ஒருவேளை நீங்கள் கேஒய்சி அப்டேட் செய்ய தவறினால் உங்களுடைய வங்கி கணக்கு முடக்கப்படலாம் .

பிஎப் கணக்கு: இந்தியாவில் வேலைக்கு செல்லக்கூடிய லட்சக்கணக்கானவர்களுக்கு ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாக இபிஎஃப்ஓ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிஎப் கணக்கில் நம்முடைய பெயரில் வரவு வைக்கப்படும் பணத்தை ஒரு அவசர தேவைக்கு நாம் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதுநாள் வரை நாம் இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்து அதற்கு பிஎப் அதிகாரிகள் அனுமதி தந்த பிறகுதான் பணம் கைக்கு வரும். இந்த நடைமுறைகளுக்கு 15 நாட்களாவது தேவைப்படும் . ஆனால் 2026 ஆம் ஆண்டு முதல் நம்முடைய பிஎப் கணக்கில் இருக்கும் பணத்தை ஏடிஎம் வாயிலாகவே நாம் எளிதாக எடுத்து பயன்படுத்த முடியும்.
அரசு சேவைகளுக்கு ஒரே தளம்: மத்திய அரசு பொது மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெரும்பாலான மக்களுக்கு இந்த நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் அவற்றை பயன்படுத்தாமல் இருந்து வருகின்றனர் . இந்த நிலையில் தான் மத்திய அரசு அனைத்து அரசு திட்டங்களும் ஒருங்கிணைந்த ஒரு தளத்தை விரைவில் அறிமுகம் செய்யப் போகிறது. இந்த இணையதளம் நடைமுறைக்கு வந்து விட்டால் ஒரு நபர் தனக்கு என்னென்ன அரசு நலத்திட்டங்கள் கிடைக்கின்றன அவற்றுக்கு எப்படி விண்ணப்பம் செய்வது என்பது உள்ளிட்ட தகவல்களை எல்லாம் இந்த ஒரு இடத்திலேயே தெரிந்து கொள்ள முடியும்.
ஸ்மார்ட் மீட்டர்: பல்வேறு நகரங்களிலும் வீடுகளில் ஸ்மார்ட் எலெக்ட்ரிசிட்டி மீட்டர் பொருத்தப்படுவதை மத்திய மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த ஸ்மார்ட் மீட்டர் பயன்பாட்டுக்கு வந்து விட்டால் உங்களுக்கு எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்பது தொடர்பான நிகழ் நேர தகவல்களை உங்களால் எளிதால் பார்க்க முடியும் என சொல்லப்படுகிறது .
டிஜிட்டல் பேமெண்டுகளுக்கு கட்டுப்பாடு: தற்போது இந்தியாவில் நிதி சார்ந்த மோசடிகள் அதிகரித்து வரக்கூடிய சூழலில் பல்வேறு வங்கிகளும் two step verification என்பதை மிக வேகமாக அமல்படுத்தி வருகின்றன. 2026 ஆம் ஆண்டில் அனைத்து விதமான ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கும் two step verification என்பது அமல்படுத்தப்பட இருக்கிறது. இதன்படி பின் நம்பர், பாஸ்வோர்ட் உள்ளிட்டவை மட்டும் இல்லாமல் கூடுதலாக ஒரு ஓடிபி-ஐ உள்ளீடு செய்தால் மட்டுமே அந்த பரிவர்த்தனை நிறைவேறும் வகையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட இருக்கின்றன.
2026 ஆம் ஆண்டு பொருத்தவரை தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களும் நடைமுறைக்கு வரக்கூடிய ஒரு ஆண்டாக நிச்சயம் இருக்கும்.
More From GoodReturns

ஏடிஎம் கார்டுக்கு வீட்டிலிருந்தே விண்ணப்பிப்பது எப்படி?ஆன்லைன் முதல் ஆஃப்லைன் வரை முழு கைடு இதோ!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications