தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2026 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டு என கூறலாம். விரைவில் நாம் நம்முடைய எம்எல்ஏக்களை தேர்ந்தெடுக்க போகிறோம். தேர்தல் ஆணையம் சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. மற்றொருபுறம் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு ஆகிய முடிவுகளை எடுத்த வண்ணம் உள்ளன.
திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இந்த முறையாக கடுமையான போட்டியை எதிர்கொண்டுள்ளன. இந்த தேர்தலில் வெற்றியாளரை தேர்ந்தெடுக்க போவது பெண் வாக்காளர்களாக தான் இருக்கப் போகிறார்கள். அண்மையில் தான் தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் விவரங்களை வெளியிட்டது.

இதன்படி தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,67,07,380 ஆக உள்ளது. இதில் ஆண் வாக்காளர்கள் 2,77,38,925 ஆகவும், பெண் வாக்காளர்கள் 2,89,60,838 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்கள் எண்ணிக்கை 7,617 ஆகவும் உள்ளது. இந்த தேர்தலில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது. எனவே அரசியல் கட்சிகளின் ஒட்டுமொத்த இலக்கே பெண் வாக்காளர்கள் தான்.
எனவே தான் தங்களுடைய தேர்தல் வாக்குறுதிகளை பெண் வாக்காளர்களை கவரும் வகையில் வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன. பெண்கள் மனதில் இடம்பிடித்தால் வெற்றி நிச்சயம். முதலில் இதனை தொடங்கி வைத்தது திமுக தான். தமிழ்நாடு அரசு சார்பாக பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வழக்கமாக மாதந்தோறும் 1000 ரூபாய் மகளிர் உரினை தொகையாக பெண்கள் பெற்று வந்த நிலையில் பிப்ரவரி மாதத்தில் திடீரென 5 ஆயிரம் ரூபாயை மகளிர் உரிமை தொகையாக கணக்கில் வரவைத்து சர்ப்ரைஸ் கொடுத்தது திமுக அரசு.

தேர்தல் நேரத்தில் நெருக்கடி வரலாம் என்பதற்காக முன்கூட்டியே மூன்று மாதத்திற்கான மகளிர் உரிமை தொகையும் இரண்டு மாதத்திற்கான கோடைகால சிறப்பு தொகையும் என 5000 ரூபாய் வரவு வைத்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். அது மட்டும் இன்றி தன்னுடைய அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் வழங்கப்படக்கூடிய மகளிர் உரிமை தொகை 2000 ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவித்தார். இது தவிர பொங்கல் பரிசு தொகையாக வழங்கப்பட்ட 3 ஆயிரம் ரூபாயும் நேரடியாக பெண்களின் கைகளுக்கே சென்றது.
அதே வேளையில் அதிமுக தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளில் பெண்களுக்கான திட்டங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்தது, தன்னுடைய முதல் கட்ட வாக்குறுதியிலேயே அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மகளிர் உரிமைத்தொகை திட்டம் போலவே குலவிளக்கு என்ற திட்டம் தொடங்கப்பட்டு குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 ரூபாய் உரிமை தொகையாக வழங்கப்படும் என்றார். மேலும் இருசக்கர வாகனம் வாங்கக்கூடிய பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
பல ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரக்கூடிய அதிமுக மற்றும் திமுக இரண்டு கட்சிகளும் பெண்களை குறி வைத்து தங்களுடைய வாக்குறுதிகளை வெளியிட்டு வரக்கூடிய சூழலில், சட்டமன்ற தேர்தல் களத்தில் புதிதாக இடம் பிடித்திருக்கும் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியும் இந்த முறை பெண்களை அடிப்படையாகக் கொண்டு அதிரடி வாக்குறுதிகளை வெளியிட்டு இருக்கிறது.
இதுநாள் வரை தேர்தல் வாக்குறுதிகளாக எதையும் வெளியிடாமல் இருந்த விஜய் மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு வாக்குறுதிகளை வெளியிட்டார். குறிப்பாக அரசு ஊழியர்கள் தவிர்த்து தகுதியுள்ள அனைத்து பெண்களுக்கும் 60 வயது வரை மாதம் 2500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என கூறினார்.
அதேபோல ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசம் என அறிவித்தார். ஏழைப் பெண்களுக்கு திருமண உதவியாக ஒரு சவரன் தங்க மோதிரம் மற்றும் பட்டுச்சேலை வழங்கப்படும் என்றும் பெண்கள் பாதுகாப்புக்காக தனி பிரிவு தொடங்கப்படும் என்றும் அவள் தெரிவித்தார். தமிழ்நாட்டின் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என கூறியுள்ளார்.
அந்த வகையில் பெண்கள் வாக்குகளை கவர போவது யார் என்ற போட்டியை விஜயின் இந்த அறிவிப்புகள் இன்னும் தீவிரப்படுத்தியுள்ளன. எனவே தேர்தல் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வந்த உடன் பெண்களை மையமாக வைத்து இன்னும், பல வாக்குறுதிகளை நாம் காண முடியும். அதே வேளையில் சீமானின் நாம் தமிழர் கட்சி 50% பெண் வேட்பாளர்களுக்கு களமிறங்குகிறது. எனவே இவற்றை எல்லாம் ஆய்வு செய்து இந்த சட்டமன்றத் தேர்தலில் யார் ஆட்சியைப் பிடிக்கப் போகிறார்கள் என்பதை முடிவு செய்யக்கூடியது பெண்களாக இருக்கப் போகிறார்கள்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications