மும்பை: மும்பையில் இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு கூட்டம் ஆகஸ்ட் 4ஆம் தேதி அன்று தொடங்கியது. மூன்று நாட்களாக நடந்த இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த ஒரு மாற்றமும் கொண்டு வரவில்லை. 2025ஆம் ஆண்டு தொடக்கம் முதல் தற்போது வரை ரிசர்வ் வங்கி 1 % வரை ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இந்நிலையில் இந்த கூட்டத்தில் வட்டி விகிதம் மீது எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. இது சாமானிய மக்களுக்கு ஏமாற்றத்தை தந்திருந்தாலும், பொதுமக்களுக்கு சாதகமான மூன்று முக்கிய அறிவிப்புகளை சஞ்சய் மல்ஹோத்ரா வெளியிட்டுள்ளார்.

மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இந்திய ரிசர்வ் வங்கி இந்திய குடிமக்களின் நலனுக்கு தான் முக்கியத்துவம் அளிக்கும் என தெரிவித்தார், இந்த பிரமிட்டின் அடித்தளம் குடிமக்கள் தான் அவர்களால் மட்டுமே இப்படி ஒரு அமைப்பே இங்கே செயல்படுகிறது என குறிப்பிட்டார். இந்த நாணய கொள்கை குழு கூட்டத்தில் மக்கள் சார்ந்த மூன்று முக்கியமான முடிவுகளை எடுத்து இருக்கிறோம் அவை என்ன என்பதை தற்போது தெரிவிக்க போகிறேன் என தெரிவித்தார்.
ஜன் தன் கணக்கு கேஒய்சி: இந்தியாவில் ஜன் தன் கணக்கு திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் முடிவடைகிறது . ஜன் தன் திட்டத்தில் கணக்கு தொடங்கிய பலரும் தங்களுடைய வங்கி கணக்கில் கேஒய்சி நடைமுறையை முழுமைப்படுத்தாமல் இருக்கின்றனர். இந்த நிலையில் ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் கேஒய்சி செய்வதற்கான முகாம்கள் நடத்தப்படும் என தெரிவித்திருக்கிறார்.
மைக்ரோ இன்சூரன்ஸ் &ஓய்வூதியம்: வங்கிகள் சார்பாக செப்டம்பர் 30ஆம் தேதி வரை பஞ்சாயத்து மட்டத்தில் முகாம்கள் நடத்தப்படுகின்றன, ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த முகாம்களை பயன்படுத்தி தங்களுடைய கேஒய்சி அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்திருக்கிறார் . ஜன் தன் கணக்கில் கேஒய்சி அப்டேட் செய்யவில்லை என்றால் அது சார்ந்த எந்த பலன்களும் கிடைக்காது என்பதையும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். அதேபோல இந்த முகாம்கள் வாயிலாக புதிதாக வங்கி கணக்குகளை தொடங்குவதற்கான வசதிகளும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன என குறிப்பிட்டு இருக்கும் அவர் இந்த முகாம்கள் வாயிலாக மைக்ரோ இன்சூரன்ஸ் மற்றும் பென்ஷன் திட்டங்களுக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்பதால் காப்பீடு மற்றும் ஓய்வூதியம் தொடர்பான தங்களுடைய குறைகளையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம் என சுட்டிக்காட்டி இருக்கிறார்.

லாக்கர் செட்டில்மெண்ட்: இறந்த நபரின் வங்கி கணக்கில் இருக்கும் பணம் அவர்களின் லாக்கரில் வைக்கப்பட்டு இருக்கக்கூடிய பொருட்களை அவர்களின் வாரிசுதாரர்களுக்கு ஒப்படைப்பது நிலையான வழிகாட்டுதல்களை கொண்டுவர இருப்பதாக அவர் கூறியிருக்கிறார் . எனவே ஒரு நபர் இறந்துவிட்டார் எனும் போது அவருடைய வாரிசுதாரர்கள் அந்த நபரின் வங்கிக் கணக்கில் இருக்கக்கூடிய பணம் மற்றும் அவரின் லாக்கரில் இருக்கக்கூடிய பொருட்களை எளிமையாக கிளைம் செய்து கொள்ளக் கூடிய வகையில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என சுட்டிக்காட்டி இருக்கிறார்.
ஆர்பிஐ ரீடைல் டைரக்ட்: இந்திய மக்கள் நேரடியாக அரசு பத்திரங்களிலும் தங்க பத்திரங்களிலும் முதலீடு செய்ய ஏதுவாக ஆர்பிஐ ரீடைல் டைரக்ட் என்ற செயலியை செயல்படுத்தி வருகிறது. இந்த தளம் வழியாக சில்லறை முதலீட்டாளர்கள் மிக எளிமையாக எஸ்ஐபி முறையில் அரசு பத்திரங்களில் முதலீடு செய்வதற்கான நடைமுறையை விரிவாக்கம் செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications