மாதச் சம்பளம் என்னவோ 15,000 தான்.. ஆனால் சொத்து மதிப்பு ரூ.30 கோடி.. பலே மோசடி அம்பலம்!

ஒரு சாதாரண அரசுப் பணியாளரின் மாதச் சம்பளம் வெறும் ரூ.15,000. ஆனால், அவரிடம் இருப்பது ரூ.30 கோடி மதிப்புள்ள சொத்துக்கள், பல வீடுகள், 40 ஏக்கர் நிலம் மற்றும் ஏராளமான தங்கம், வெள்ளி என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? கர்நாடகாவில் நடந்த ஒரு அதிர்ச்சி தரும் ஊழல் வழக்கில், லோக்ஆயுக்தா அதிகாரிகள் நடத்திய சோதனையில் இந்த சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மாதச் சம்பளத்தை விடப் பல மடங்கு அதிகமான சொத்துக்களைச் சேர்த்து வைத்திருந்தது எப்படி?

மோசடி வழக்கு மற்றும் முக்கியக் குற்றவாளி: இந்த ஊழல் வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படுபவர் கலகப்பா நிடகுண்டி. கொப்பல் நகரில் உள்ள கர்நாடக கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு லிமிடெட் (KRIDL) என்ற அரசு நிறுவனத்தில் இவர் எழுத்தராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கலகப்பா நிடகுண்டி மற்றும் முன்னாள் KRIDL பொறியாளர் இசட்.எம். சின்சோல்கர் ஆகியோர் சேர்ந்து, 96 முழுமையடையாத திட்டங்களுக்குப் போலி ஆவணங்களைத் தயாரித்து, அதன் மூலம் ரூ.72 கோடிக்கும் அதிகமான தொகையை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மாதச் சம்பளம் என்னவோ 15,000 தான்.. ஆனால் சொத்து மதிப்பு ரூ.30 கோடி.. பலே மோசடி அம்பலம்!

லோக்ஆயுக்தா சோதனையில் மீட்கப்பட்ட சொத்துக்கள்: கலகப்பா நிடகுண்டியின் வீட்டில் லோக்ஆயுக்தா அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஏராளமான சொத்துக்கள் குறித்த ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதிகாரிகள் மீட்டுள்ள சொத்துக்களின் விவரங்கள் மிகவும் பிரமிக்க வைக்கின்றன. அதில், 24 குடியிருப்புச் சொத்துக்கள், நான்கு மனைகள் மற்றும் 40 ஏக்கர் விவசாய நிலங்களின் ஆவணங்கள். ஒரு எழுத்தராகச் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு இவ்வளவு பெரிய சொத்துக்களை வாங்குவது என்பது முடியாத காரியம். மேலும், அவரது வீட்டில் இருந்து 350 கிராம் தங்கம், 1.5 கிலோ வெள்ளி மற்றும் இரண்டு கார்கள், இரண்டு இரு சக்கர வாகனங்கள் உட்பட நான்கு வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளன. இந்தச் சொத்துக்கள் அனைத்தும் கலகப்பா நிடகுண்டி, அவரது மனைவி மற்றும் அவரது சகோதரரின் பெயர்களில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணையும் அரசின் நடவடிக்கையும்: இந்த ஊழல் தொடர்பாக லோக்ஆயுக்தாவில் புகார் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த விசாரணைதான் கலகப்பா நிடகுண்டியின் ஊழல் சாம்ராஜ்யத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது. கடந்த ஜூலை 23 அன்று, இந்த வழக்கில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி உட்பட எட்டு அதிகாரிகளின் 41 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு, ரூ.37.42 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சோதனைகள் பெங்களூரு நகர்ப்புறம், மைசூர், தும்குரு, கலபுர்கி, கொப்பல் மற்றும் குடகு மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகள் தொடர்பான இடங்களில் நடந்தன. இந்த விவகாரத்தை அரசாங்கம் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க விரிவான விசாரணை நடத்தப்படும் என கொப்பல் சட்டமன்ற உறுப்பினர் கே. ராகவேந்திர ஹிட்னல் உறுதி அளித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+