தங்கம் விலை உயர்வு தான் உலகம் முழுவதுமே பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயமாக மாறி இருக்கிறது. நாள்தோறும் ஒரு நிபுணர் தங்கம் விலை தொடர்ந்து உயரும் தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள், தங்கம் 2 லட்சத்தை எட்டப் போகிறது என சர்வதேச அளவிலும் சரி உள்ளூர் அளவிலும் சரி தங்கம் குறித்து தான் பேசி வருகின்றனர். செய்திகளிலும் நாம் தங்கம் குறித்து தான் அதிக அளவில் பார்க்கவும் படிக்கவும் முடிகிறது.
2025இல் எவ்வளவு உயர்வு: உலக அளவில் பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்படும் போதெல்லாம் தங்கம் விலை உயர்வது உண்மை தான். ஆனால் இந்த ஆண்டு கொடுத்த காசுக்கு மேல கூவுர என சொல்வதற்கு ஏற்ப தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து இருக்கிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஜனவரி 1ஆம் தேதி 7,150 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்று அதுவே 11,260 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதாவது 1 கிராம் 4110 ரூபாய் என விலை உயர்ந்துள்ளது ஒரு சவரன் 32,880 ரூபாய் உயர்வு கண்டுள்ளது.

தங்கம் : இதுவரை பூமியிலிருந்து 1,87, 200 டன்கள் தங்கம் பூமியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது என்கிறது உலக தங்க கவுன்சில். ஒவ்வொரு நாடும் தங்கம் கையிருப்பை அதிகப்படுத்துவதை தங்களுடைய அந்தஸ்தாக பார்க்கின்றன. உலகளவில் பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்படும் சமயங்களில் எல்லாம் தங்கம் நான் பாதுகாப்பான சொத்து என்ற மனநிலை தான் சாதாரண குடும்பங்கள் தொடங்கி பெரிய பெரிய நாடுகளின் மத்திய வங்கிகள் வரை தங்கத்தை வாங்கி வைப்பதற்கு காரணமாக இருக்கிறது .
60 ஆண்டுகளில் தங்கம் விலை: இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளில் தங்கம் விலை எப்படி இருந்தது, எப்போதெல்லாம் தங்கம் விலை உச்சத்தை எட்டியது என்பதை நாம் இப்போது பார்க்கலாம். 1965 ஆம் ஆண்டில் இந்தியாவில் 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை வெறும் 63 ரூபாய் தான். வெறும் 63 ரூபாய்க்கு விற்கப்பட்ட 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் இன்றைய விலை 1,24,000 ரூபாய். 60 ஆண்டுகளில் தங்கத்தின் விலை எவ்வளவு அபரிபிதமான வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பது இதை பார்க்கும் போதே நமக்கு தெரியும்.
எப்போதெல்லாம் உயர்வு: 1979 ஆம் ஆண்டு மத்திய கிழக்கு நாடுகளில் மிகப்பெரிய மோதல்கள் ஏற்பட்டன . ஈரான் புரட்சிக்கு பிறகு மத்திய கிழக்கு நாடுகளின் நிலவிய நிலையற்ற தன்மை தங்கத்தின் விலையை உயர்த்தியது . அப்போது இந்தியாவில் 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை 937 ரூபாய்க்கு விற்பனையானது. அடுத்ததாக 1987 ஆம் ஆண்டு உலக பங்குச்சந்தை பெரிய அளவிலான சரிவை அடைந்தது அப்போது தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டு 2570 ரூபாய் என அதிகரித்தது.
போர் பதற்றம்: 2008 ஆம் ஆண்டு மீண்டும் உலக பொருளாதாரம் சரிவடைந்தது அப்போது தங்கத்தின் விலை 12,500 என உச்சம் தொட்டது . 2012 ஆம் ஆண்டில் ஐரோப்பிய பத்திர கடன் பிரச்சனை தொடங்கியது . அந்த சமயத்திலும் இந்தியாவில் 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை 31,000 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது. 2019 ஆம் ஆண்டு மத்திய கிழக்கு நாடுகளில் போர் உச்சத்தில் இருந்தது. அந்த சமயத்தில் உலகம் முழுவதும் மேற்பட்ட பொருளாதார நிலையற்ற தன்மை போர் பதற்றம் தங்கம் விலையை 10 கிராம் 35,220 ரூபாய் என உயர்த்தியது.

கொரோனா காலத்தில் உயர்வு: 2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்தில் அனைத்து தொழில்களும் முடங்கி போயிருந்தன. இதன் காரணமாக தங்கம் விலை இந்தியாவில் 48,651 ரூபாய் என உயர்ந்தது . தற்போது தங்கம் வரலாறு காணாத உச்சத்தில் இருக்கிறது. 24 கேரட் தங்கம் 10 கிராம் 1,24,000 ரூபாய் என்ற அளவில் எட்டியிருக்கிறது .
ஏன் இப்போது உயர்வு: சீனா தங்கம் வாங்கி குவிப்பது, பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தீவிரமாக தங்கத்தை வாங்குவது , அமெரிக்க உள்ளிட பல்வேறு நாடுகளின் வங்கிகள் வட்டி குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது மற்றும் பல்வேறு நாடுகளுக்கு இடையிலான புவிசார் மோதல்கள் மற்றும் வர்த்தக மோதல்கள் இந்த முறை தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக இருக்கின்றன .
தங்கம் வாங்க அறிவுரை: தங்கம் விலை உயர்வு ஒருபுறம் இருந்தாலும் பல்வேறு தரகு நிறுவனங்களும் தங்கம் விலை தொடர்ந்து உயரும் என்ற கணிப்பையே வெளியிடுகின்றன. கோல்ட்மேன் சாக்ஸ், சிட்டி குரூப், மார்கன் ஸ்டான்லி என உலக தரகு நிறுவனங்களும் நிபுணர்களும் தங்கம் முதலீட்டை அதிகப்படுத்துங்கள் அதிக அளவில் தங்கம் வாங்கி வையுங்கள் என தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.
அச்ச உணர்வு: ஏன் தங்க முதலீட்டுக்கு எதிராக இருந்த வாரன் பஃபெட்டே தங்கம் வாங்குங்கள் என கூறுகிறார். எங்கு பார்த்தாலும் யாரை பார்த்தாலும் தங்கத்தை வாங்கி வையுங்கள் என்று அறிவுரை தான் வழங்குகின்றனர் . இப்படி பெரிய பெரிய தலைகள் அனைத்துமே தங்க விலை உயரும் விலை உயரும் என தொடர்ந்து கூறுவது சாமானிய மக்களை பொறுத்த வரை ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகிறது என கூறலாம்.
விலை குறையவே குறையாதா?: தங்கம் விலை குறைய வேண்டும் என்றால் சீனா தங்கத்தை வாங்குவதை நிறுத்த வேண்டும், பல்வேறு நாடுகளுக்கு இடையிலான போர் முடிவுக்கு வர வேண்டும், பங்குச்சந்தைகளும் பத்திரங்களும் நல்ல லாபம் தருபவையாக மாற வேண்டும், உலக பொருளாதாரம் நிலைத்தன்மை அடைய வேண்டும். இவை அனைத்தும் தற்போதைக்கு நடப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை. எனவே தங்கம் விலை உயர தான் போகிறது. அப்படி குறைந்தாலும் பெரிய சரிவு இருக்காது. 1000 முதல் 2000 வரை குறையலாம், அதற்கு மேல் குறைய வாய்ப்பே இல்லை என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!



Click it and Unblock the Notifications