ஐஆர்சிடிசி நிறுவனம் இந்திய ரயில்வேயுடன் இணைந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றுலா திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் மூன்று தென்னிந்திய மாநிலங்களுக்கு 10 நாட்களுக்கான ஒரு பிரத்தியேக ஆன்மீக சுற்றுலா திட்டத்தை ஐஆர்சிடிசி அறிவித்திருக்கிறது.
ராமேஸ்வரம் தொடங்கி திருப்பதி வரை என தென்னிந்தியாவில் இருக்கக்கூடிய முக்கியமான அனைத்து கோயில்கள் மற்றும் ஆன்மீக தலங்களுக்கும் செல்லக்கூடிய வகையில் பாரத் கௌரவ் டூரிஸ்ட் டிரெயின் பேக்கேஜ் (Bharat Gaurav Tourist Train package) என்ற ஒரு சுற்றுலா பேக்கேஜை அறிமுகம் செய்திருக்கிறது . 9 இரவுகள் 10 பகல் என நவம்பர் 7ஆம் தேதி தொடங்கி நவம்பர் 16ஆம் தேதி வரை இந்த சுற்றுலா பயணம் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

5 முக்கிய நகரங்களுக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய கோவில்கள் மற்றும் ஆன்மீக தலங்கள், சுற்றுலா தலங்களை மக்கள் பார்வையிட முடியும். இந்த புதிய பாரத் கௌரவ் ரயில் திருப்பதியில் தன்னுடைய பயணத்தை தொடங்குகிறது. அங்கே மக்கள் பத்மாவதி தாயார் கோயில், பெருமாள் கோயில் ஆகிய இரண்டிலும் தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து ராமேஸ்வரம் செல்வார்கள். ராமேஸ்வரத்தில் தனுஷ்கோடி , ராமநாதசுவாமி கோயில் ஆகியவற்றுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
ராமேஸ்வரத்தில் இருந்து ரயில் அடுத்ததாக அந்த ரயில் மதுரைக்கு செல்கிறது. மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பயணிகள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இதனையடுத்து கன்னியாகுமரிக்கு செல்லக்கூடிய இந்த ரயில் ஹால்ட் செய்யப்படும். அங்கே விவேகானந்தர் நினைவு மண்டபம் , காந்தி மண்டபம் மற்றும் அங்கு இருக்கக்கூடிய கோவில்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
இறுதியாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு அழைத்து செல்லப்படுவார்கள் . அங்கே பத்மநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு கோவளம் கடல் கரைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்த பயணத்தில் ஆன்மீக தலங்கள் மட்டும் இல்லாமல் பயணம் செய்யக்கூடிய அனைத்து ஊர்களிலும் இருக்கக்கூடிய சிறப்பு சுற்றுலா தலங்களுக்கும் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவதை உறுதி செய்யவும் சௌகரியமான அனுபவத்தை வழங்கும் பல்வேறு ஏற்பாடுகளை ஐஆர்சிடிசி செய்திருக்கிறது .
ஐஆர்சிடிசி-யின் இந்த பத்து நாட்கள் சுற்றுலாத் திட்டத்தில் பயணம் செய்ய 11 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஸ்லீப்பர் கிளாஸில் 18,040 ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்படும். அதே போல 3ஏசி பெட்டியில் பயணம் செய்ய விரும்புபவர்கள் 30,370 ரூபாய், 2ஏசி வகுப்பில் பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு 40 ,240 ரூபாயும் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஸ்லீப்பர் கிளாஸில் 16,890 3ஏசி பெட்டியில் 29,000, 2ஏசி பெட்டியில் 38,610 ரூபாயும் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.
இது ரயிலுக்கான போக்குவரத்து கட்டணம் மட்டுமில்லாமல் உணவு ,தங்குமிடம் ,உள்ளூர் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துக்கும் என சேர்த்து மொத்த கட்டணமாக வசூல் செய்யப்படுகிறதாம். ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாகவும் செயலி வாயிலாகவும் இந்த பாரத் கௌரவ் திட்டத்தில் ஆன்மீக சுற்றுலா செல்ல முன்பதிவு செய்து கொள்ளலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications