பாபா ராம்தேவ் தலைமையிலான பதஞ்சலி நிறுவனத்தின் பல்வேறு பொருட்களுக்கு இதற்கு முன்பு தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது விதிமுறைகளுக்கு இணங்காததால் பதஞ்சலி நிறுவனத்திற்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி பதஞ்சலி நிறுவனத்தில் தயாரிக்கப்படும் மிளகாய் பொடியை சந்தையில் இகுந்து திரும்பப் பெறுமாறு நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அறிவிப்பு ஒன்றில் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை விதிமுறைகள் 2011-க்கு இணங்காததால் பேட்ச் நம்பர் AJD2400012-ஐ கொண்ட பேக்கேஜ் செய்யப்பட்ட சிவப்பு மிளகாய் பொடியின் முழு தொகுப்பையும் திரும்பப் பெறுமாறு பதஞ்சலி நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

1986-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பாபா ராம்தேவ் தலைமையிலான பதஞ்சலி ஆயுர்வேத குழுமத்தின் நிறுவனமான பதஞ்சலி புட்ஸ் இந்தியாவின் இயங்கி வரும் FMCG நிறுவனங்களில் ஒன்றாகும். பதஞ்சலி புட்ஸ் எண்ணை உற்பத்தி, சோயாவில் இருந்து உணவுப் பொருட்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் போன்றவற்றை தயார் செய்கிறது. அதோட வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள், உணவு பொருட்கள், பிஸ்கட், ஊட்டச்சத்து பொருட்கள், சுகாதாரப் பொருட்கள் போன்ற பல்வேறு தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளது.
செப்டம்பர் காலாண்டில் பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 21 சதவீதம் அதிகரித்து ரூ.308.97 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இதன் நிகர லாபம் ரூ.254.53 கோடியாக இருந்தது. இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் மொத்த வருமானம் ரூ.8,198.52 கோடியாக உயர்ந்துள்ளது.
FSSAI நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் பாதுகாப்பு எப்படி உள்ளது? மற்றும் தரம் எப்படி இருக்கிறது? என்பதை கண்காணிக்கும் அரசு நிறுவனமாகும். உணவுப் பொருட்களில் பதப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் பொருட்களுக்கும் வரம்பு உள்ளது. அதைத் தாண்டி பயன்படுத்தினாலோ? அல்லது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களை பயன்படுத்தினாலோ? அதை சரி செய்யும் நோக்கில் நிறுவனம் செயல்படும்.
அதன்படி கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் தயாரிக்கப்படும் சில மசாலா பொருட்களில் எத்திலின் ஆக்சைடு என்ற பூச்சிக்கொல்லி கலப்படம் இருப்பதாக கண்டறியப்பட்டது. இதை அடுத்து சில மசாலா பொருட்களின் உற்பத்தி உரிமங்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications