நடுத்தர வர்க்க குடும்பங்களில் பலர் கனவு காணும் ஒரு விஷயம் - முழுநேர ஸ்டாக் டிரேடிங் செய்தால் கோடி கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்பது தான். "ரூ.1 லட்சம் மூலதனத்தில் தினமும் ரூ.5,000 சம்பாதிக்கலாம்" என்று சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்கள், விளம்பரங்களே இத்தகைய எண்ணத்தை தூண்டுகின்றன.
மாதத்தில் 20 நாட்களில் டிரேடிங் செய்து தினமும் 5000 சம்பாதித்தால் கூட மாதம் ரூ.1 லட்சம் வருமானம் என்று வரும் என்ற மாய கணக்கிற்கு பலர் விழுந்து விடுகின்றனர். இது மிக எளிமையாகத் தோன்றலாம்.

ஆனால் இது அனைத்தும் லாபம் வந்தால் மட்டுமே உண்மையாகும். முழுநேர ஸ்டாக் டிரேடிங் என்பது மிகவும் எளிதானது என்று நம்பி, பலர் தற்போது வேலையை விட்டுவிட்டு முழுநேர டிரேடராக மாற முடிவு செய்கிறார்கள்.
ஆனால் இது ஒரு பெரிய டிராப் என்று SEBI-யில் பதிவு செய்யப்பட்ட முதலீட்டு ஆலோசகரும், HP Private Wealth நிறுவனத்தின் நிறுவனருமான ஹிமான்ஷு பாண்டியா தனது லிங்க்ட்இன் பதிவில் எச்சரித்துள்ளார்.
இது எப்படி தொடங்குகிறது?
பங்குச்சந்தை வர்த்தகத்தில் முதலீடு செய்யும் போது முதலில் சிறு லாபங்கள் வரும். பிறகு சில இழப்புகள் வரும். அப்போது "இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று யூடியூப் வீடியோக்கள், ஆப்ஷன்ஸ் செல்லிங், தீட்டா டிகே, கிரீக்ஸ் (Greeks) போன்றவற்றைப் படிக்கத் தொடங்குகிறார்கள்.
இவற்றை படித்த பின்பு பங்குச்சந்தையில் எனக்கு அனைத்தும் தெரியும், "இப்போது நான் சிஸ்டத்தை கிராக் செய்துவிட்டேன்" என்று உணர்கிறார்கள். இந்த கட்டத்தில் தான் ரிஸ்க் எடுக்கும் ஆர்வம் அதிகரிக்கும், கையில் இருக்கும் பணத்தை தாண்டி, குடும்ப சேமிப்பை அனைத்தையும் டிரேடிங் கணக்கில் போட்டுவிட்டு, செய்து வரும் மாத சம்பள வேலையை விட்டுவிட்டு முழுநேர ஸ்டாக் டிரேடராக மாறுகிறார்கள்.
ஆனால் உண்மை வேறு. ப்ரொபஷ்னல் டிரேடர்கள் ஆண்டுக்கு 30% லாபத்தை பெற்று கொண்டாடுகின்றனர். ஆனால் முழுநேர டிரேடராக மாறியவர்களில் 100க்கு 95 பேர் கையில் இருக்கும் மொத்த பணத்தையும் டிரேடிங்-ல் முதலீடு செய்வதால் மாத இறுதியில் வீட்டு வாடகை, EMI, குடும்ப செலவுகள், குழந்தைகள் படிப்பு என்று மாதாந்திர தேவைகளுக்கு பங்குச்சந்தை முதலீட்டில் இருந்து பணத்தை எடுக்க வேண்டிய கட்டாயம் வருகிறது.

இப்படி ஒவ்வொரு மாதமும் வீட்டுத்தேவைகாக பணத்தை எடுக்கும் போது மூலதனம் வளராமல், வெறுமென பங்குச்சந்தையில் survival-க்காக மட்டுமே வர்த்தகம் செய்ய வேண்டி சூழ்நிலை வரும். இத்தகைய சூழ்நிலையில் பணவீக்கம் உயர்ந்து கொண்டே இருக்கும், மன அழுத்தம் அதிகரிக்கும், டிரேடிங் கணக்கில் பணம் மாட்டிக்கொள்ளும். இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் பங்குச்சந்தை முதலீட்டில் சரிவு ஏற்பட்டால் மொத்தமும் கோவிந்தா.
உண்மையான செல்வம் என்பது காம்பவுண்டிங் தான். முதலீட்டை நீண்ட காலம் வைத்து, அதை வேலை செய்ய விடுவது தான் செல்வத்தை உருவாக்கும். ஆனால் முழுநேர வர்த்தகம் செய்யும் போது, அது உங்கள் "சம்பளம்" ஆகிவிடும். ஒவ்வொரு மாதமும் லாபத்தை எடுத்து செலவு செய்ய வேண்டியிருக்கும். இதனால் காம்பவுண்டிங் நின்றுவிடும். இங்கு தான் ப்ரொபஷ்னல் டிரேடர்கள் பணத்தை கணக்கில் இருந்து எடுக்காமல் ஆண்டுக்கு 30% லாபத்தை பெறுகின்றனர்.
பணியை விடுத்து முழுநேர வர்த்தகம் செய்வது "சுதந்திரம்" என்று நினைப்பது தவறு. இது ஒரு புதிய வேலை மட்டுமே என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.

ஏன் இது நடுத்தர வர்க்கத்துக்கு பெரிய TRAP?
பெரும்பாலான நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு வேலைக்கு செல்லும் காரணத்தால் நிலையான சம்பளம், பிராவிடண்ட் ஃபண்ட், கிராச்விட்டி, லோன் வசதி போன்றவை இருக்கும். ஆனால் முழுநேர டிரேடிங் செய்யும்போது, இவை அனைத்தும் இழக்கப்படும்.
வங்கிகள் லோன் கொடுக்க மறுப்பார்கள், ஏனெனில் "உறுதியான வருமானம் இல்லை" என்று கூறுவார்கள். பண நெருக்கடி வரும் போது மன அழுத்தம், தனிமை, உடல்நல பிரச்சினைகள் அதிகரிக்கும். ப்ரோபெஷ்னல் டிரேடர்களுக்கு கூட இது கடினம் தான். ஆனால் சாமானிய மக்களுக்கு இது இன்னும் ஆபத்தானது.
தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற பெரு நகரங்களில் ஐடி, தொழில், அரசு ஊழியர்களுக்கு பங்குச்சந்தை முதலீடு குறித்து கிடைக்கும் விழிப்புணர்வு அதிகம். இதனால் பலர் சமூக ஊடகங்களில் "டிரேடிங்" வீடியோக்களை பார்த்து, வேலையை விட்டு முழுநேர டிரேடராக மாற முயற்சிக்கின்றனர். ஒரு தவறான முடிவு குடும்பத்தை பாதிக்கும் என்பதை உணர வேண்டும்.

எப்போது முழுநேர டிரேடராக மாறலாம்..?
உங்கள் குடும்ப செலவுக்களுக்கு (பிள்ளைகள் கல்வி, மருத்துவ செலவுகள் உட்பட) நிலையான வருமான வழியை உருவாக்கிவிட்டு, ஆபத்து காலத்தில் தேவையான நிதி ஆதாரத்தை உறுதி செய்த பின் உங்கள் கையில் இருக்கும் பணத்தை வைத்துக்கொண்டு முழுநேர டிரேடிங் செய்யலாம்.
இத்தகைய சூழ்நிலையில் அடிப்படை தேவை அனைத்தும் பூர்த்தி செய்யப்படுவதால் உங்களுக்கு டிரேடிங் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது, நீங்கள் செய்யும் முதலீடு காம்போண்டிங் செய்ய தயாராகும். இத்தகைய காலக்தத்தில் வேலையை விடுவது சரியான முடிவாக இருக்கும். ஆனால் நீண்ட கால அடிப்படையில் முழுநேர டிரேடிங் சரியானதாக இருக்குமா என்பதை யோசித்துக்கொண்டு முடிவு எடுக்க வேண்டியது உங்கள் கையில் தான் உள்ளது.
More From GoodReturns

10 கிராம் தங்கம் 2 லட்சம் வரை உயர வாய்ப்பு..! தங்கம் $6000, வெள்ளி $100 எட்டுமா?

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

தங்கம், வெள்ளி விலை: பிப்ரவரியில் நடந்த மேஜிக் மார்ச் மாதத்திலும் தொடருமா?

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

பங்குச் சந்தை ரிஸ்க் பயமா? லாபத்திற்கு கியாரண்டி தரும் Bonds - முதலீடு செய்வது எப்படி?

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

வாழ்க்கையை என்ஜாய் பண்ண சீக்கிரம் ரிடையர்மெண்ட்? மாதம் ரூ.75,000 டூ 1 லட்சம் பென்ஷன் வேண்டுமா?

தங்கத்தில் முதலீடு செய்யப் போறீங்களா ? இவ்வளவு செஞ்சீங்கன்னா போதும் : ரே டேலியோ கூறும் கணக்கு

தங்கம் Vs வெள்ளி:ETF ரேஸில் ஜெயிப்பது யாரு? 2026-ல் உங்கள் பணத்தை எதில் போடலாம்?

தினமும் ரூ.10 போதும்! டீ குடிக்கிற செலவுல லட்சாதிபதி ஆகலாம் – எதிர்காலத்திற்கான மைக்ரோ SIP மேஜிக்!

ரியல் எஸ்டேட் முதலீடு நிஜமாகவே லாபமா? வாடகை வருமானத்தில் ஒளிந்திருக்கும் சவால்கள் என்ன?



Click it and Unblock the Notifications