ஒரேயொரு பெயின்டர் அவன் பேரு கோவாலு.. பியூச்சர் குழுமத்தை வாங்க வந்த ஒரேயொரு நிறுவனம்..!

இந்திய ரீடைல் சந்தையில் கொடிகட்டிப் பறந்த நிறுவனமான பியூச்சர் குரூப் சில வர்த்தகத் துறையில் இறங்கி பெரும் தோல்வி அடைந்தது மட்டும் அல்லாமல் அந்த வர்த்தகப் பிரிவுக்காக வாங்கிய கடன்கள் பெரும் சிக்கலுக்குள் தள்ளியது. இது மட்டும் அல்லாமல் தற்போது வர்த்தகம், வருவாய், வாடிக்கையாளர்களை இழந்து திவாலாகி, மொத்த நிறுவனத்தை விற்க கிஷோர் பியானி தயாரான நிலையிலும் வாங்க ஆள் இல்லாமல் நிற்கிறது பியூச்சர் குழுமம்.

பியூச்சர் குழுமம் அதிகப்படியான கடனில் இருந்த நிலையில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திற்கு விற்பனை செய்வதாகப் பியூச்சர் குரூப் தலைவர் கிஷோர் பியானி ஒப்பந்தம் செய்தார். இந்த ஒப்பந்தத்தைத் தடை செய்ய அமேசான் இந்தியா தொடுத்த வழக்கு பியூச்சர் குரூப் சாம்ராஜ்ஜியத்தைப் பெரும் கடனில் சிக்கவைத்தது.

ஒரேயொரு பெயின்டர் அவன் பேரு கோவாலு.. பியூச்சர் குழுமத்தை வாங்க வந்த ஒரேயொரு நிறுவனம்..!

இதன் எதிரொலியாகப் பியூச்சர் ரீடைல் வாங்கிய கடனை செலுத்த முடியாத நிலையில் திவாலானதாக அறிவிக்கப்பட்டு இந்நிறுவன கடனுக்குத் தீர்வு காண முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பியூச்சர் ரீடைல் லிமிடெட்-க்குத் தீர்வு காண நியமிக்கப்பட்ட டெலாய்ட் நிறுவனத்தின் விஜய் குமார் ஐயர் விருப்ப விண்ணப்பத்தைக் கோரிய நிலையில் ஒரேயொரு நிறுவனம் மட்டுமே பிட்டிங் செய்துள்ளது.

கொல்கத்தாவைத் தளமாகக் கொண்ட BC ஜிண்டால் குழுமத்தின் ஒரு பகுதியான ஸ்டீல் டியூப் மற்றும் பைப் தயாரிப்பாளரான ஜிண்டால் லிமிடெட் ஃபியூச்சர் எண்டர்பிரைசஸ் லிமிடெட்-ஐ கைப்பற்றத் தேர்வாகியுள்ள ஒரேயொரு ஏல விண்ணப்பதாரராக உருவெடுத்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஃபியூச்சர் எண்டர்பிரைசஸ்-ஐ விற்க 8 மாதங்களுக்கும் மேலான செயல்முறைக்குப் பிறகு ஒரேயொரு ஏல விண்ணப்பதாரராக உருவெடுத்துள்ளது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஏல விண்ணப்பங்களைப் பெறும் பணிகள் துவக்கத்தில் 20க்கும் அதிகமானோர் விருப்பம் தெரிவித்தாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது ஒரு நிறுவனம் மட்டுமே முன்வந்துள்ளது.

ஃபியூச்சர் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்குக் கடன் அளித்தவர்கள் ஒன்றிணைந்து சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் சென்ட்பேங்க் ஃபைனான்சியல் சர்வீசஸ் தலைமையிலான கூட்டணிக்கு அமைக்கப்பட்டது. இக்கூட்டணிக்கு ஃபியூச்சர் எண்டர்பிரைசஸ் மொத்தம் ரூ.12,265 கோடி கடன் செலுத்த வேண்டியுள்ளது. இந்தக் கடனுக்குத் தீர்வு காணவே விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஃபியூச்சர் எண்டர்பிரைசஸ்-ஐ கைப்பற்ற விருப்ப விண்ணப்பம் சமர்ப்பிக்கக் கடைசித் தேதியான வெள்ளிக்கிழமை முடியும் வரை ஜிண்டாலின் திட்டம் மட்டுமே கடன் அளித்தவர்களின் கூட்டணி பெறப்பட்டது. இந்த நிலையில் விஜய் குமார் தலைமையிலான தீர்வு குழு இதை ஏற்குமா என்பது பெரும் சந்தேகம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+