இந்திய ரீடைல் சந்தை மொத்தமும் எதிர்பார்க்கும் மிக முக்கியமான வர்த்தக ஒப்பந்தமாக இருக்கும் ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் பியூச்சர் ரீடைல்-ஐ எதிர்த்து அமேசான் போட்ட வழக்கு மாபெரும் முட்டுக்கட்டையாக இருக்கும் நிலையில், தற்போது 18 மாத போராட்டத்திற்கு விடிவு காலம் கிடைத்துள்ளது.
அமேசானுக்குப் போட்டியாகப் பியூச்சர் குரூப் நிறுவனமும் அடுத்தடுத்து வழக்கு தொடுத்து வரும் நிலையில், இன்று நடந்த வழக்கு விசாரணையில் முக்கியமான திருப்பம் ஏற்பட்டு உள்ளது.
இந்தத் திருப்பத்தின் மூலம் ரிலையன்ஸ் ரீடைல், பியூச்சர் ரீடைல், அமேசான் ஆகிய அனைத்து நிறுவனங்களும் நன்மை அடைய உள்ளது.
பியூச்சர் குரூப் மற்றும் அமேசான்
வியாழக்கிழமை நடந்த வழக்கு விசாரணையில் பியூச்சர் குரூப் மற்றும் அமேசான் ஆகிய இரு தரப்பு வழக்கறிஞர்களும் நீதிமன்றத்திற்கு வெளியில் பேச்சுவார்த்தை பிரச்சனையைச் சரி செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாக அறிவித்தனர். இதனால் 18 மாதங்களாக நடந்து வரும் வழக்குத் தற்போது முடிவுக்கு வருகிறது.
நஷ்டஈடு அல்லது பங்கு பரிமாற்றம்
பியூச்சர் குரூப் தனது வர்த்தகம் அனைத்தையும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திற்கு விற்பனை செய்வது குறித்து அமேசான்-க்கும் பிரச்சனை தீர்க்கும் வண்ணம், சில முக்கிய நஷ்டஈடு அல்லது பங்கு பரிமாற்றம் செய்வது குறித்துப் பேசி முடிவு எடுக்கப்பட உள்ளது. ஆனால் பியூச்சர் குரூப் தனது வர்த்தகம் அனைத்தையும் ரிலையன்ஸ் ரீடைல்-க்கு விற்பனை செய்வதில் எவ்விதமான மாற்றமும் இல்லை.
12 நாள் அவகாசம்
இன்றைய விசாரணையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்பு பியூச்சர் குரூப் மற்றும் அமேசான் வழக்கறிஞர்களின் Out of court Settlement-க்குச் சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் அளித்து 12 நாள் அவகாசம் கொடுத்துள்ளது. இதன் மூலம் மார்ச் 15ஆம் தேதி மீண்டும் வழக்கு விசாரணை தொடர உள்ளது.
18 மாத போராட்டம்
18 மாதங்களாக அமேசான் - பியூச்சர் குரூப் மத்தியில் வழக்கு நடந்து வரும் நிலையில் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதேவேளையில் பியூச்சர் குரூப் திவாலாகும் நிலையின் விளிம்பில் உள்ளது, இதேபோல் பியூச்சர் குரூப்-ன் கடைகளை அடுத்தடுத்து ரிலையன்ஸ் ரீடைல் கைப்பற்றி வருகிறது.
சிசிஐ - அமேசான்
மேலும் ஃப்யூச்சர் குரூப் ரோமோட்டர் நிறுவனமான எஃப்சிபிஎல்-ல் அமேசானின் 2019 முதலீட்டை நிறுத்திய இந்தியாவின் போட்டி ஆணையத்தின் (சிசிஐ) உத்தரவை எதிர்த்து அமேசான் மனுவை என்சிஎல்ஏடி விசாரித்து வருகிறது. இந்த மனுவின் முடிவுகள் அமேசான் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் காரணத்தால் தற்போது அமேசான் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications