ரூ.30,000 கோடி டீல்.. முகேஷ் அம்பானி-க்கு கிடைக்கப்போகும் ஜாக்பாட்..!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் கடந்த சில மாதத்தில் அனைவருக்கும் எதிர்பார்க்கும் 2 முக்கியத் திட்டங்களில் ஒன்று, சவுதி அரேபியாவின் அரசு கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனமான ஆராம்கோ-வின் 15 பில்லயன் டாலர் முதலீடு திட்டம். மற்றொன்று பிக் பஜார்-ன் தாய் நிறுவனமான பியூச்சர் குரூப் நிறுவனத்தைக் கைப்பற்றும் திட்டம்.

கொரோனாவால் ஏற்பட்ட வர்த்தகம் மற்றும் வருமான பாதிப்பால் சவுதி மிகப்பெரிய நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அரசு மற்றும் அரசு சலுகையில் நிதி செலவினத்தைக் கட்டுப்படுத்து சவுதி முடிவு செய்துள்ளது. இதன் எதிரொலியாகச் சீனாவில் அமைக்கத் திட்டமிட்டு இருந்த 10 பில்லியன் டாலர் மதிப்பிலான சுத்திகரிப்பு ஆலை திட்டம் கைவிட்டது சவுதி ஆராம்கோ. இதனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உடனான முதலீடு திட்டம் நிறைவேறுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.

இந்நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ரீடைல் வர்த்தகப் பிரிவைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யவும், இந்திய ரீடைல் வர்த்தகச் சந்தையில் தனது ஆதிக்கத்தை மேலும் அதிகரிக்கவும், பியூச்சர் குரூப் நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்றும் திட்டத்தின் இறுதி முடிவு நாளை அதாவது சனிக்கிழமை முக்கியமான ஆலோசனை கூட்டத்தின் வாயிலாக முடிவு செய்யப்பட்ட உள்ளார் முகேஷ் அம்பானி.

பியூச்சர் குரூப்

பியூச்சர் குரூப்

வருகிற சனிக்கிழமை (நாளை) பியூச்சர் குரூப் நிறுவனத்தை வர்த்தகத்தை மொத்தமாக ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய இறுதிக்கட்ட ஆலோசனையைப் பியூச்சர் குரூப் நிர்வாகக் குழு ஆலோசனை செய்து முடிவு எடுக்க உள்ளது.

முகேஷ் அம்பானி தற்போது பியூச்சர் குரூப் நிறுவனத்தின் மொத்த வர்த்தகத்துடன் சேர்த்து, இக்குழுமத்தின் கடன், நிலுவை கட்டணங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க அளவிலான பங்குகள் அனைத்தையும் பணமாகக் கொடுத்து வாங்க உள்ளார்.

 

வர்த்தக இணைப்பு

வர்த்தக இணைப்பு

தற்போது கிடைத்துள்ள தகவல்கள் படி பியூச்சர் குரூப் நிறுவனத்தின் மளிகை பொருட்கள், ஆடை, சப்ளை செயின், கன்ஸ்யூமர் வர்த்தகம் ஆகிய அனைத்தையும் பியூச்சர் எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்துடன் ஒன்றாக இணைக்க உள்ளது. தற்போது பியூச்சர் குரூப்-ன் மொத்த ரீடைல் வர்த்தக Back-End கட்டமைப்பு அனைத்தும் பியூச்சர் எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்திடம் தான் உள்ளது.

வர்த்தகம் மற்றும் நிர்வாக இணைப்பிற்குப் பின் மொத்த ரீடைல் சொத்துக்களையும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒற்றை நிறுவனமாக விற்பனை செய்ய உள்ளது பியூச்சர் குரூப்.

 

மொத்த மதிப்பு

மொத்த மதிப்பு

இந்நிலையில் இணைப்பிற்குப் பின் பியூச்சர் எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் மொத்த வர்த்தகத்தையும் 29,000 முதல் 30,000 கோடி ரூபாய் தொகைக்கு விற்பனை செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் 13,000 கோடி ரூபாய் பியூச்சர் குரூப்-ன் கடன்களைச் செலுத்தவும், 7,000 கோடி ரூபாய் தொகையை நிலுவையில் வாடகை, வர்த்தகர்களிடம் இருக்கும் பாக்கி தொகைக்கும், 6,000 முதல் 7000 கோடி ரூபாயை ப்ரோமோட்டர் குரூப் நிறுவனத்திற்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் செலுத்த உள்ளது.

 

பங்கு கைப்பற்றல்

பங்கு கைப்பற்றல்

இதோடு ரிலையன்ஸ் கூடுதலாக 3000 கோடி ரூபாய் செலுத்தி இணைக்கப்பட்ட பியூச்சர் எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தில் 14 முதல் 16 சதவீத வர்த்தகத்தைக் கைப்பற்ற உள்ளது ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம்.

இந்தப் பங்கு கைப்பற்றல் பியூச்சர் குரூப் நிறுவனத்தில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் நிர்வாகம் மற்றும் வர்த்தக முடிவில் தனது ஆதிக்கத்தைச் செலுத்த முடியும்.

 

முக்கிய வர்த்தகம்

முக்கிய வர்த்தகம்

பியூச்சர் குரூப் நிறுவனத்தில் FMCG முக்கிய வர்த்தகமாக இருந்தாலும், நுகர்வோர், டெக்ஸ்டைல் மில், இன்சூரன்ஸ் நிறுவனம் போன்ற இதர வர்த்தகமும் உள்ளது.

இந்தக் கைப்பற்ற மூலம் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் வர்த்தக விரிவாக்கத்திற்கும், புதிய வர்த்தகப் பிரிவுக்குள் நுழையவும் பெரிய அளவிலான வாய்ப்புகளை அளிக்கும். அதேபோல் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திற்கு ஆடைகளைத் தயாரித்துக் கொடுக்கவும், மளிகை பொருட்களைக் கொடுக்கவும் நீண்ட கால ஒப்பந்தமும் செய்யப்பட உள்ளது.

 

லாபம்

லாபம்

இந்த வர்த்தக இணைப்பின் மூலம் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திற்குக் கூடுதலாக 1,800 பெரும் வர்த்தகக் கடைகளும், 26,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய வர்த்தகமும் கிடைக்கும்.

இது ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தக வளர்ச்சிக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இருக்கும்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+