பியூச்சர் ரீடைல் நிறுவனத்தை வாங்க 49 பேர் போட்டி.. மீண்டும் ரிலையன்ஸ் போட்டி, அமேசான் விடுமா..?

இந்தியாவின் முன்னணி ரீடைல் நிறுவனமாக இருந்த பியூச்சர் குரூப் அதிகப்படியான கடன் காரணமாகவும், ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திற்கு விற்பனை செய்வதாக பியூச்சர் குரூப் தலைவர் கிஷோர் பியானி ஒப்பந்தம் செய்த நிலையில், இந்த ஒப்பந்தத்தை தடை செய்ய அமேசான் இந்தியா தொடுத்த வழக்கு பியூச்சர் குரூப் சாம்ராஜ்ஜியத்தை பெரும் கடனில் சிக்கவைத்தது.

இதன் எதிரொலியாக பியூச்சர் ரீடைல் வாங்கிய கடனை செலுத்த முடியாத நிலையில் திவாலானதாக அறிவிக்கப்பட்டு இந்நிறுவன கடனுக்கு தீர்வு காண முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பியூச்சர் ரீடைல் லிமிடெட்-க்கு தீர்வு காண நியமிக்கப்பட்ட டெலாய்ட் நிறுவனத்தின் விஜய் ஐயர் முதல் முறை போதுமான விண்ணப்பங்கள் வராத நிலையில், 2வது முறையாக விருப்ப விண்ணப்பத்தை கோரியது.

பியூச்சர் ரீடைல் நிறுவனத்தை வாங்க 49 பேர் போட்டி.. மீண்டும் ரிலையன்ஸ் போட்டி, அமேசான் விடுமா..?

இந்த நிலையில் தற்போது 49 விருப்ப விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ரிலையன்ஸ் ரீட்டைல், WH ஸ்மித், கோர்டன் பிரதர்ஸ் தலைமையிலான சர்வதேச கூட்டணி, JC Flowers, ஜின்டால் பவர் போன்ற பல நிறுவனங்கள் விருப்ப விண்ணப்பம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தாலும், எந்தொரு நிறுவனமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. நவம்பர் மாதம் நடந்த முதல் EOI சுற்றில் அம்பானியும், அதானியும் போட்டிப்போட்டதாக கூறப்பட்ட நிலையில் இச்சுற்று ரத்து செய்யப்பட்டது.

பியூச்சர் ரீடைல் சுமார் 21000 கோடி ரூபாய் அளவிலான கடனை கொண்டு உள்ளது. பியூச்சர் ரீடைல் தற்போது சில நூறு பெரிய மற்றும் சிறிய பிக் பஜார் கடைகளை நாட்டின் பல பகுதிகளில் வைத்துள்ளது. இது மட்டும் அல்லாமல் WH SMITH பிராண்டின் 100 கடைகளை நிர்வாகம் செய்யும் 100 சதவீத பங்குகளை வைத்திருக்கும் கிளை நிறுவனங்கள் உள்ளது. இது மட்டும் அல்லாமல் 10 புட்ஹால் பிராண்ட் கடைகளும் வைத்துள்ளது.

பியூச்சர் ரீடைல் நிறுவனத்தை சுமார் 24,713 கோடி ரூபாய்க்கு வாங்குவதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஒப்பந்தம் செய்தது. ஆனால் அமெசான் போட்ட வழக்கின் காரணமாக பியூச்சர் ரீடைல் சாம்ராஜ்ஜியம் வீழ்ந்தது. பியூச்சர் குரூப் தலைவர் கிஷோர் பியானி கடுமையான நெருக்கடியில் இருக்கும் போது அமேசானிடம் பல கண்டிஷன்கள் கீழ் சிறிய தொகையை கடனாக பெற்றது, இந்த கண்டிசனை மீறி ரிலையன்ஸ் ரீடைல் உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது தான் பிரச்சனை.

அமேசான், பியூச்சர் குரூப் நிறுவனத்திற்கு கடன் கொடுக்கும் போது தனது போட்டி நிறுவனங்களுக்கு எந்த காரணத்திற்காகவும், எப்போதும் கடனை திருப்பி கொடுக்கும் வரையில் விற்பனை செய்ய கூடாது என கண்டிஷன் போட்டு இருந்தது. இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் சேர்க்கப்பட்டு இருந்தது, இதையும் மீறி கிஷோர் பியானி ஒப்பந்தம் செய்தார். இதை எதிர்த்தது அமேசான் வழக்கு தொடுத்த நிலையில், கிஷோர் பியானி தரப்பில் இருந்தும் வழக்கு தொடுக்கப்பட்டது.

இப்படியிருக்கும் நிலையில் பியூச்சர் ரீடைல், வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் திவாலாக அறிவிக்கப்பட்டு தீர்வு காண முடிவு செய்யப்பட்டு முதல் சுற்று தோல்வி அடைந்தது. 2வது சுற்றில் ரிலையன்ஸ் ரீடைல் விருப்ப விண்ணப்பத்தை கொடுத்துள்ள நிலையில் இதில் வெற்றிபெறும் பட்சத்தில் அமேசான் மீண்டும் வழக்கு தொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+