இந்தியா ரீடைல் சந்தையில் மிகவும் முக்கியமான வர்த்தக ஒப்பந்தமாகப் பார்க்கப்படும் பியூச்சர் குரூப் - ரிலையன்ஸ் ரீடைல் திட்டத்தை அமெரிக்க நிறுவனமான அமேசான் தொடுத்துள்ள வழக்கு மூலம் தடை விதித்துள்ளது.
இதனால் பியூச்சர் குரூப் தான் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் தவித்து வருகிறது. இந்நிலையில் பியூச்சர் குரூப் தற்போது தொடுத்துள்ள கோரிக்கை மூலம் அமேசான் முக்கியமான முடிவை எடுத்தாக வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
பியூச்சர் குரூப் நிறுவனம்
பியூச்சர் குரூப் நிறுவனத்திற்குக் கடன் கொடுத்தவர்களுக்கு இந்நிறுவனம் உரிய நேரத்தில் கடனை செலுத்த முடியாத காரணத்தால் இந்நிறுவனத்தையும் இந்நிறுவன சொத்துக்களையும் வாராக் கடனாக அறிவிக்க முடிவு செய்து, கடைசி நேரத்தில் கால அவகாசம் கொடுத்தது.
சிறு அளவிலான கடைகள்
இந்நிலையில் பியூச்சர் குரூப் தனது சிறு அளவிலான கடைகள் பிரிவை (small format stores) விற்பனை செய்து கடனுக்கான தவணையைச் செலுத்த அனுமதி அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்த நிலையில் அமேசான் வழக்கம் போல் மறுப்புத் தெரிவித்தது. இது பியூச்சர் குரூப்-க்கு கடன் கொடுத்தவர்கள் மத்தியிலும் பெரிய பிரச்சனையை உருவாக்கியது.
3,500 கோடி ரூபாய் கடன்
இதைத் தொடர்ந்து பியூச்சர் ரீடைல் நிறுவனத்தின் தனிப்பட்ட தலைவர்கள் ஸ்மால் பார்மெட் ஸ்டோர்களை விற்பனை செய்ய மறுத்துள்ள நிலையில் அமேசானிடம் நீண்ட கால அடிப்படையில் 3,500 கோடி ரூபாய் கடனை கேட்டுள்ளது.
அமேசான்
இந்தக் கடன் பியூச்சர் ரீடைல் வாங்கியுள்ள கடனுக்கான தவணை செலுத்தி NPA பிரச்சனையில் தப்பிக்கப் பயன்படுத்தப்படும் எனவும், அமேசான் இதற்கான பதிலை வருகிற ஜனவரி 24ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் எனக் கண்டிஷன் வைத்துள்ளனர்.
வங்கி அமைப்புகள்
பியூச்சர் ரீடைல் நிறுவனத்தின் தனிப்பட்ட தலைவர்கள் இந்த 3500 கோடி ரூபாய் கடனை எப்படிச் செலுத்தப்போகிறது என்பதை நேரடியாக வங்கி அமைப்புகளிடமே ஆலோசனை செய்துகொள்ளவும் ஒப்புதல் அளித்துள்ளது.
ஜனவரி 29 கெடு
மேலும் பியூச்சர் ரீடைல் ஜனவரி 29ஆம் தேதிக்குள் 3,500 கோடி ரூபாய் தொகையை வங்கி மற்றும் நிதி அமைப்புகளுக்குச் செலுத்த வேண்டும். பியூச்சர் ரீடைல்-ன் ஸ்மால் பார்மெட் பிரிவின் கீழ் 800 ஈஸிடே மற்றும் ஹெரிடேஜ் ஸ்டோர்ஸ் வைத்துள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல்
இந்தக் கடைகளை வாங்க தயாராக இருப்பதும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் தான். பியூச்சர் ரீடைல்-ன் ஸ்மால் பார்மெட் பிரிவின் 800 கடைகளை ரிலையன்ஸ் நிர்வாகம் எளிதாக 7Eleven கடைகளாக மாற்ற முடியும்.
அமேசான் எடுக்கும் முடிவு ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் ரீடைல் ஒப்பந்தத்திற்கு ஒரு தீர்வை காண உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications