உலகியலில் எந்த விஷயமும் நிரந்தரமில்லை, விவசாயிகளின் வாழ்க்கையும் அப்படித்தான். எப்போது விளைபொருள் ஏறும் எப்போது வீழும் என்றே கணிக்க முடியாத காலச்சூழ்நிலை ஆகிவிட்டது. கடந்த சில மாதங்களுக்கு தக்காளி விலை கிலோ ரூ.200 தாண்டியது. அதற்கு சில மாதங்களுக்கு முன்னர் வெங்காயத்தை உரிக்கவே வேண்டாம் விலையைக் கேட்டாலே மக்கள் கண்களில் நீர் பெருக்கெடுத்தது.
ஒருவழியாக தக்காளி விலை நார்மலான சில மாதங்களுக்குள் இப்போது பூண்டின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பாடு படு திண்டாட்டமாகிவிட்டது.

தக்காளி, பூண்டு, வெங்காயம் இல்லாத சமையலே இந்தியாவில் இல்லை. இந்நிலையில் இந்த மசாலா பொருட்களின் விலை சகட்டுமேனிக்கு ஏறி இறங்குவதால் மிகவும் சிரமத்தை மக்கள் சந்திக்கின்றனர். இதற்கு ஆட்சியாளர்களும் ஒரு நிரந்தரத் தீர்வைக் காணாமல் வேடிக்கையாக பதில் அளிக்கின்றனர்.
வெங்காயம், பூண்டு விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த முடியாதா என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேட்டால் நான் பூண்டு, வெங்காயம் சாப்பிடுவதில்லை. அதனால் நீங்களும் சாப்பிடாதீர்கள். பிரச்னை இருக்காது என்றார்.
தமிழகத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் ஹெச்.ராஜாவோ இப்படி விலையேறும் பொருட்கள் ஒரு சில மாதங்கள் வாங்காமல் இருந்துவிட்டாலே விலை தானாகக் குறைந்து விடும் என்று திருவாய் மலர்ந்துள்ளார். அப்பாவி பொதுஜனங்களோ, இதெல்லாம் ரொம்ப ஓவர் யுவர் ஆனர் என்று புலம்பத்தான் முடிந்தது.
ஒரு கிலோ பூண்டின் விலை இப்போது ரீடைல் மார்க்கெட்டில் அதிகபட்சமாக ரூ.400க்கு விற்கிறது. சில பகுதிகளில் ரூ.300-400க்கு விற்கிறது. சாமானிய மக்களால் இதைத் தாங்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் விசாரித்தால் விளைச்சல் குறைந்ததாலும் மார்க்கெட்டுக்கு பூண்டு வரத்து குறைந்துவிட்டதாலும் விலை அதிகரித்து விட்டதாகக் காரணம் சொல்கின்றனர்.
இந்த நிலைமை இன்னும் மோசமாகப் போகும் என்று மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்னரும் பூண்டின் விலை அதிகரித்துள்ளது. அப்போது அதன் விலை கிலோ ரூ.130-140 என்றளவில் இருந்தது. உயர்தர பூண்டு விலை ரூ.220-250 என இருந்தது. ஆனால் இப்போது வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சியை அடைந்துள்ளனர்.
வெங்காயத்துக்கு பின்னர் ஒரே வாரத்தில் பூண்டு இருமடங்கு விலை உயர்ந்து சாதனையைப் படைத்துள்ளது. நாடு ழுவதும் பருவம் தவறிய மழையினால் பூண்டு விளைச்சல் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அண்மையில் வந்த மிச்சாங் புயலால் ஏற்பட்ட கடும் மழையினாலும் பூண்டு பயிர்கள் அதிகம் சேதம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. பூண்டு சாகுபடி மீண்டும் வரும்போதுதான் விலை குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக வேளாண்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். பொதுவாகவே குளிர்காலத்தில் பூண்டின் விளைச்சல் குறைந்து சற்றே விலை ஏறுவது வழக்கம்.
இதனிடையே மத்திய அரசு பூண்டு விலையைக் குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறினாலும் விலை ரூ.400 நோக்கித்தான் இருக்கிறது. விலை இப்படி இருக்கிறது என்று சொல்வதைக் காட்டிலும் மக்களின் குரல்வளையை இறுக்குகிறது என்றால் பொருத்தமாக இருக்கும்.
சில்லறை விலைதான் ரூ.400, மொத்த மார்க்கெட்டில் கிலோ ரூ.200 தான் என்று சிலர் சப்பை கட்டுகின்றனர். எது எப்படியோ இன்னும் கொஞ்ச காலத்துக்கு பூண்டு வியாபாரிகள் காட்டில் தான் இப்போது அதிர்ஷ்ட மழை! விவசாயிகள் பெரிதாக பலன் பெறுவதாகத் தெரியவில்லை.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications