இந்திய பெரும் பணக்காரரும், அதானி குழுமத்தின் தலைவருமான கௌதம் அதானி உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரக்கூடிய மகா கும்பமேளா நிகழ்வில் கலந்து கொண்டார். கௌதம் அதானி தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தினருடன் பிரயாக்ராஜிற்கு வருகை தந்திருந்தார். தன்னுடைய பயணத்தின் முக்கிய நிகழ்வாக திரிவேணி சங்கமத்தில் அவர் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார். கும்பமேளாவில் இஸ்கான் அமைப்பு சார்பாக வழங்கப்படும் சேவா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது தனது மனைவி பிரீத்தி அதானியுடன் இணைந்து கும்பமேளாவுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு அவர் உணவு வழங்கினார். கும்பமேளாவில் மகா பிரசாத் சேவா திட்டத்தின் கீழ் இஸ்கான் அமைப்புடன் இணைந்து அதானி குழுமம் நாள்தோறும் ஒரு லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கி வருகிறது. கௌதம் அதானி நேரடியாக சென்று கலந்து கொண்டு பக்தர்களுக்கு உணவு வழங்கினார்.
மகா கும்பமேளாவில் கலந்து கொள்வது உற்சாகமாக இருக்கிறது எனக் கூறியிருக்கும் கௌதம் அதானி மகா பிரசாத் சேவா திட்டத்தின் கீழ் 50 லட்சம் பக்தர்களுக்கு உணவு வழங்க இருக்கிறோம் என தெரிவித்தார். இதற்காக மேளா பகுதியிலும் அதற்கு வெளியிலும் இரண்டு சமையலறைகளில் உணவு தயாரிக்கப்படுகிறது என குறிப்பிட்ட அவர் மகா கும்பமேளா பகுதியில் 40 இடங்களில் இந்த பிரசாதம் வழங்கப்படும் என்றார்.

இதனை அடுத்து திரிவேணி சங்கமத்திற்கு சென்று அவர் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார். இந்த மகா கும்பமேளாவில் தனக்கு வாழ்வின் மிகச் சிறந்த அனுபவம் கிடைத்திருப்பதாக அப்போது பேசிய கௌதம் அதானி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகிய இருவரும் மகா கும்பமேளாவிற்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்திருக்கின்றனர் இந்த நாட்டு மக்களின் சார்பாக அவர்களுக்கு நன்றி தெரிவிக்க நான் விரும்புகிறேன் என கூறினார். கங்கை தாயின் ஆசிர்வாதம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி என அவர் கூறினார்.
இதனை அடுத்து அவர் அனுமன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த வாரம் மகா கும்பமேளா நிகழ்ச்சி தொடங்கியது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறக்கூடிய இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர். துறவிகள் ,பண்டிதர்கள் என ஏராளமானவர்கள் கும்பமேளாவில் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
முன்னதாக மாநிலங்களவை உறுப்பினரும் இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவியுமான சுதாமூர்த்தி , பிரயாக்ராஜிற்கு திங்கட்கிழமை அன்று வருகை தந்தார். மூன்று நாட்களுக்கு தான் இங்கே தங்கி இருப்பதாக கூறியிருக்கும் அவர் 144 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு கும்பமேளா நடக்கிறது அதில் கலந்து கொள்வது தனக்கு மிக்க மகிழ்ச்சி தருகிறது என தெரிவித்தார்.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications