முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனம், தனது டிஜிட்டல் வணிகத்தினை விரிவுபடுத்தும் பொருட்டு தொடர்ச்சியாக முதலீடுகளை திரட்டி வருகின்றது.
அந்த வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம், இரண்டாவது முறையாக ரிலையன்ஸ் குழுமத்தில் முதலீடு செய்ய உள்ளது.
ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தின் 0.84% பங்குகளை, 3,675 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளது.
ரிலையன்ஸ் சில்லறை வணிகத்தில் 3வது முதலீடு
ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தின் இந்த முதலீடானது ரிலையன்ஸ் ரீடெயில் வணிகத்தில் செய்யப்படும் மூன்றாவது முதலீடு இதுவாகும். இந்தியாவில் மிகப்பெரிய அளவில் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ரிலையன்ஸ் நிறுவனத்தில், முன்னதாக கேகேஆர் நிறுவனம் 754 மில்லியன் டாலர்களையும், இதே சில்வர் லேக் நிறுவனம் 1 பில்லியன் டாலர்களையும் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன.
ஜெனரல் அட்லாண்டிக்கின் 2வது முதலீடு
ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தின் இந்த முதலீடு மூலம், ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 4.28 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தின் இரண்டாவது முதலீடாகும். இதற்கு முன்பாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொலைத் தொடர்பு வணிகமாக ஜியோவில் 6598.38 கோடி ரூபாயினை முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலீடு குறித்து மிக்க மகிழ்ச்சி
இது குறித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்துடனான உறவை நீட்டிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.
இதே ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம், ரிலையன்ஸ் சில்லறை வணிகத்தினை இந்தியா முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் கொண்டு கொண்டு செல்லும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளது.
இஷா அம்பானி என்ன சொல்கிறார்?
ரிலையன்ஸ் சில்லறை நிறுவனத்தின் தலைவர் இஷா அம்பானி இது குறித்து கூறுகையில், இரு நிறுவனங்களும் தொடர்ந்து இந்தியாவின் சில்லறை வணிக சூழலை மேம்படுத்துகின்றன.
சில்லறை துறையில் சாதகமான மாற்றத்தினை ஏற்படுத்தும் அம்பானியின் இந்த முயற்சிக்கு, ஜெனரல் அட்லாண்டிக் ஆதரவளிப்பதாக அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பில் ஃபோர்டு தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் போட்டி
இந்தியாவில் மிகப்பெரிய சந்தைகளைக் கொண்டுள்ள அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு போட்டியாக உள்ள ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனம் தனது வணிகத்தினை மேம்படுத்தி வருகின்றது. ரிலையன்ஸ் நிறுவனம் இந்த முதலீடுகள் திரட்டல் மூலம் தனது வணிகத்தை மேலும் மேலும் விரிவுபடுத்த ரிலையன்ஸ் முயன்று வருகின்றது. உண்மையில் மற்ற இகாமர்ஸ் நிறுவனங்களுக்கு விரைவில், ரிலையன்ஸ் சவாலாக மாறலாம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications