டெல்லி: உத்தரப்பிரதேசத்தின் இரு இடங்களில் நிறைய தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் நாட்டின் கையிருப்புத் தங்கத்தின் அளவை அதிக தங்கம் கிடைத்து இருக்க வாய்ப்பு இருக்கிறதாம்.
இதுதொடர்பாக உத்தரப்பிரதேச சுரங்கத்துறை இயக்குநரக அதிகாரி கே.கே.ராய் கூறுகையில், இரண்டு தசாப்த கால தேடலுக்கு கிடைத்த வெற்றி என்றும் கூறியுள்ளார்.
தங்கம் சுரங்கம் கண்டுபிடிப்பு
இது குறித்து வெளியான அறிக்கையில், 20 ஆண்டுகள் தேடலுக்கு பிறகு மத்திய மற்றும் மாநில சுரங்கத்துறை இயக்குநரகம் இணைந்து நடத்திய ஆய்வின் முடிவில் சோன்பத்ரா மற்றும் ஹர்தி ஆகிய இடங்களில் தங்கச் சுரங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் சோன் பஹாதியி மற்றும் ஹர்தி பகுதியில் நிறைய தங்கம் இருக்க வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.
ஐந்து மடங்கு அதிகம்
இந்த மதிப்புமிக்க தங்க சுரங்கத்தை ஏலம் விட அரசு முடிவு செய்துள்ளது. எல்லா நடைமுறைகளும் முழுமையாக முடிந்த பின், இணைய வழி ஏல நடவடிக்கைகளை கவனிக்க உள்ளார்களாம். இந்த சுரங்கத்தில் தங்கம் மட்டும் அல்லாது யுரேனியம் போன்ற அரிய தாதுக்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இந்த தாதுக்கள் கூட இருக்கலாம்
மேலும் தங்கத்தை தவிர இந்த பகுதியில் யுரேனியம் போன்ற அரிய தாதுக்கள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளையும் அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. உத்திரபிரதேசத்தின் புண்டேல்கண்ட் மற்றும் விந்தியன் மாவட்டங்களில் இன்னும் வேறு என்ன மாதிரியான உலோகங்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன என ஆராய்ந்து வருகிறார்களாம்.
வளர்ச்சிக்கு வழிவகுக்கும்
இவ்வாறு பரந்த சுரங்கங்கள் மற்றும் பிற கனிமங்களை ஆராய்வது மாநிலத்தின் வருவாய்க்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும். மேலும் வேலை வாய்ப்புகளையும் ஊக்குவிக்கும், மேலும் இது உத்திரபிரதேசத்தின் இரண்டு பின் தங்கிய மாவட்டங்களின் வளர்ச்சிக்கு இது வழி வகுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளில் தங்கம் இருப்பு
இந்த நிலையில் உலக தங்கக் கூட்டமைப்பின் படி இந்தியாவிடம் தற்போது 626 டன் தங்கம் கையிருப்பு உள்ளது. இது உலகளவு தங்கத்தின் அளவில் 6.6% ஆகும். மேலும் இந்த அறிக்கையின் படி அதிகபட்சமாக அமெரிக்காவிடம் 8,133.5 டன் தங்கம் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் ஜெர்மனியிடம் 3,366 டன், இத்தாலியிடம் 2,451.8 டன், பிரான்ஸிடம் 2,436 டன், ரஷியாவிடம் 2,241.9 டன், சீனாவிடம் 1,948.3 டன், சுவிட்ஸர்லாந்திடம் 1,040 டன் மற்றும் ஜப்பானிடம் 765.2 தங்கம் கையிருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

இன்று தங்கம், வெள்ளி விலை என்ன ஆனது? இனி வரும் நாட்களில் விலை ஏறுமா இறங்குமா?

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?



Click it and Unblock the Notifications