நாட்டின் முன்னணி எஃப்எம்சிஜி நிறுவனங்களில் ஒன்று ஜில்லெட் இந்தியா லிமிடெட் (ஜிஐஎல்). இந்நிறுவனம் ஓரள்-பி, ஜில்லெட்,வீனஸ் மற்றும் பிரவுன் போன்ற உலகளவில் அறியப்பட்ட பிராண்டுகளை கொண்ட நிறுவனமாகும். டிவிடெண்ட் வருமானத்தை மனதில் வைத்து பங்குகளில் முதலீடு செய்யும் இந்த முதலீட்டாளர்களுக்கு இந்த பங்கு ஒரு அமுத சுரபி. இந்நிறுவனம் தொடர்ந்து நிலையாக டிவிடெண்ட் வழங்கி வருவதே இதற்கு காரணம். முதலீட்டாளர்கள் இந்நிறுவன பங்கின் மீது எப்போது்ம் ஒரு கண் வைத்திருப்பார்கள்.
ஜில்லெட் இந்தியா நிறுவனம் அண்மையில் தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டது. 2025 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.686 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 7 சதவீதம் அதிகமாகும். கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.126 கோடி ஈட்டியுள்ளது. இது 2023 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 21 சதவீதம அதிகமாகும்.

ஜில்லெட் இந்தியா நிறுவனம் அண்மையில் தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.65 இடைக்கால டிவிடெண்டாக அறிவித்தது. இது 2017ம் ஆண்டு முதல் இதுவரையிலான காலத்தில் அதிகபட்ச இடைக்கால டிவிடெண்டாகும். ஜில்லெட் இந்தியா நிறுவனத்தின் தற்போதைய பங்கு விலையில் (ரூ.8,415), தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இடைக்கால டிவிடெண்ட் 1.31 சதவீதமாக உள்ளது.
கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தில் அனனிய நிறுவன முதலீட்டாளர்களின் பங்கு மூலதனம் 4.11 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2022 மார்ச் முதல் இதுவரையிலான காலத்தில் கடந்த காலாண்டில்தான் அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு மூலதனம் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது.
தற்போது ஜில்லெட் இந்தியா நிறுவன பங்கு 57.9 மடங்கு பிஇ மதிப்பில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இது கோவிட் காலமான 2020 மார்ச் இருந்த 66 மடங்கு பிஇ-ஐ காட்டிலும் குறைவாகும். பங்கின் சந்தை விலைக்கும், ஒரு பங்கு வருமானத்துக்கும் உள்ள விகிதம் பி/இ விகிதம் எனப்படும். பி/இ விகிதம் = தற்போதைய பங்கின் விலை/ ஒரு பங்கு வருமானம். பொதுவாக பி/இ விகிதம் 25க்குக் கீழ் இருப்பது லாபகரமாகும்.
Story written by: Subramanian
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications