ஈரானில் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கி மிகத் தீவிரமாக போர் நடைபெற்று வருகிறது. ஈரான் போர் தொடங்கியதில் இருந்தே உலக மக்களுக்கு நடந்த ஒரே நல்ல விஷயம் என்னவென்றால் தங்கத்தின் விலை குறைந்தது தான். ஈரான் போர் தொடங்கியது முதல் உலக சந்தையிலும் சரி இந்தியாவிலும் சரி தங்கத்தின் விலை குறைந்தது.
இந்த சூழலில் ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட தொடங்கி இருக்கின்றன. அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படதாகவும் மேற்கொண்டு அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய மாட்டோம் என ஈரான் தரப்பில் உறுதி தந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

அதேவேளையில் ஈரான் தரப்பு ஹார்முஸ் ஜலசந்தியை சரக்கு கப்பல்களின் போக்குவரத்திற்கு திறக்க தயாராக இருக்கிறோம் என ஐநா பாதுகாப்பு அவைக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. ஈரான் நாட்டுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபடக் கூடிய நாடுகளுக்கு சொந்தமான கப்பல்கள் தவிர மற்ற அனைத்து கப்பல்களையும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நாங்கள் அனுமதிக்க தயாராக இருக்கிறோம் என ஈரான் அறிவித்திருக்கிறது.
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரண்டு தரப்பிலுமே போர் நிறுத்தத்தை நோக்கி செல்வதற்கான சாத்திய கூறுகள் தெளிவாக தென்பட தொடங்கியுள்ளன. குறிப்பாக கச்சா எண்ணெய் போக்குவரத்தை சீர் செய்வதற்கான வாய்ப்பு அதிகமாகியுள்ளது. இதன் காரணமாக உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது.
சர்வதேச சந்தையில் ஸ்பாட் கோல்டின் விலை ஒரு அவுன்ஸ் 100 டாலர்களுக்கும் மேல் உயர்ந்து 4,587 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட நான்கு 4% அதிகமாகும். அதே போல ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலையும் 4 டாலர்கள் உயர்வு கண்டு 73.77 டாலராக வர்த்தகமாகி வருகிறது. ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு கச்சா எண்ணெய்க்கான டிமாண்ட் அதிகரித்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.

கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் அமெரிக்க டாலர் வலுப்பெற்றது. எனவே முதலீட்டாளர்கள் தங்கம் , வெள்ளியை விடுத்து அமெரிக்க டாலரிலும் கச்சா எண்ணெயிலும் அதிக முதலீடு செய்தனர். இதனால் தான் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஈரான் போருக்கு மத்தியிலும் பெருமளவு சரிந்தது. அமெரிக்க மத்திய வங்கியும் மேற்கொண்டு வட்டி குறைப்பு நடவடிக்கை எதையும் அறிவிக்கவில்லை. எனவே முதலீட்டாளர்களுக்கு டாலர் அடிப்படையிலான முதலீடுகள் சிறந்த வட்டி வருமானம் தருபவையாக மாறின.
ஆனால் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்திருப்பதால் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்து இருக்கிறது. டிரேடிங் எக்கனாமிக்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு கீழ் வர்த்தகம் ஆகிறது. ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 98 டாலராக இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை சரிந்து இருப்பதால் உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்தது.
கோமெக்ஸ் வர்த்தகத்திலும் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 4600 டாலர் என உயர்ந்தது, அதே போல ஒரு அவுன்ஸ் வெள்ளி விலை 74.44 டாலராக ஏறியது. ஆகவும் அடுத்தக்கட்டமாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும் பட்சத்தில் தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் உயரும். இது இந்தியாவிலும் எதிரொலிக்க தொடங்கும்.
நேற்றே சில்லறை விற்பனையில் காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்ந்தது. உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்து இருப்பதால் இந்தியாவிலும் இன்று தங்கம் விலை உயரும். அடுத்தகட்டமாக இரு தரப்பும் அமைதி பேச்சுவார்த்தையை எப்படி முன்னெடுக்க போகின்றன என்பதை பொறுத்து தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: அட்சய திருதியை நெருங்குவதால் மக்கள் அதிர்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: தங்கம் விலை இனி குறையுமா? உயருமா?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: மக்களே இத கவனிக்கலனா உங்க தலையில துண்டு!!

தங்கம், வெள்ளி விலை சரிவு: ஈரான் போர் தீவிரமடைந்தால் இன்னும் தங்கம் விலை குறையுமா?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

ஈரான் போட்ட முட்டுக்கட்டை! இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்வி..ஜேடி வேன்ஸ் சொன்ன அந்த பேட் நியூஸ்!



Click it and Unblock the Notifications