இந்திய குடும்பங்களின் உணர்வுகளோடும், ஒரு பெண்ணின் திருமணக் கனவுகளோடும் பின்னிப் பிணைந்த ஒரு பொக்கிஷம் தான் தங்கம். ஆனால், 2026ன் தொடக்கத்தில் சர்வதேச சந்தையில் தங்கம் 4,725 டாலர் என்ற இமாலய உச்சத்தைத் தொட்டிருப்பது, பல சாமானியர்களின் நெஞ்சில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்பு பெரிதும் சேமிப்புக்காக பார்க்கப்பட்ட தங்கம், இன்று போர் பதற்றங்கள், அமெரிக்காவின் வர்த்தக போர் மற்றும் உலக நாடுகளின் பொருளாதார நிச்சயமற்ற தன்மையால் தவிர்க்க முடியாத பாதுகாப்பு அரணாக மாறியுள்ளது. 37% விலை உயர்வு என்பது வெறும் எண்கள் அல்ல. அது ஒரு சராசரி மனிதன் தன் மகளின் திருமணத்திற்காக சிறுகச் சிறுக சேர்த்து வைத்த கனவின் விலை உயர்வு. கிட்டத்தட்ட 5,000 டாலர்கள் என்ற மைல்கல்லை தங்கம் எட்டிப்பிடிக்க பாயும் இந்த வேளையில், இது ஒரு முதலீட்டு வாய்ப்பா அல்லது எட்டாக்கனியா? வாருங்கள் அலசுவோம்.

தங்க ஏற்றமும், அதன் பின்னனியும்!
தங்கமானது வரலாறு காணாத அளவில் தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் சூழலில், தற்போது அவுன்ஸூக்கு 4,725 டாலர்களாக உச்சத்தை எட்டியுள்ளது. கணிக்க முடியாத இந்த ஏற்றமானது இன்னும் எங்கே போய் நிற்குமோ என்ற கவலையும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 12 மாதங்களில் இந்த விலை உயர்ந்த உலோகமானது 78% மேலாக ஏற்றம் கண்டுள்ளது. இதற்கு சர்வதேச அளவில் நிலவி வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள், வர்த்தக போர் விவகாரங்கள், பொருளாதாரத்தில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழல் என பலவும் முக்கிய காரணிகளாக அமைந்துள்ளது. குறிப்பாக தற்போது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல், அமெரிக்கா - கிரீன்லாந்து விவகாரமானது கொழுந்து விட்டு எரியத் தொடங்கியுள்ளது. இது இவ்விரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனையாக மட்டுமல்லாது, சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக ஒரு காலத்தில் அமெரிக்காவுக்கு ஆதரவாக பேசி வந்த நாடுகள் கூட, போர் கொடி உயர்த்தியுள்ளன. இது இன்னும் எந்த அளவுக்கு விவகாரமாகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த சூழலில் தான் பாதுகாப்பு புகலிடமான தங்கமும் ராக்கெட் வேகத்தில் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவின் தொடர் அச்சுறுத்தல்கள்!
அமெரிக்கா தங்களுக்கு சாதகமான ஒத்து வராத நாடுகளுக்கு வரி என்ற பெயரில் தொடர்ந்து அச்சுறுத்தல்களை காட்டி வருகிறது. இது ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு தான் என்றாலும், தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கே மிரட்டல் விடுத்துள்ளது. இது சர்வதேச பொருளாதாரத்தை எந்த மாதிரியான நிலைக்கு கொண்டு செல்லுமோ என அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக பிரான்ஸ், ஜெர்மனி, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கும் வரி விதிப்பது குறித்த அறிவிப்பின் மத்தியில், பங்குச் சந்தைகள் ரத்த களரியாய் மாறியுள்ளன. ஒரே நாளில் பல லட்சம் கோடிகள் இழப்பு ஏற்பட்டுள்ளது. கரன்சிகளின் மதிப்பு மீண்டும் அதல பாதாளம் நோக்கி நகரத் தொடங்கி விட்டன. இந்த சூழலில் தான் முதலீட்டாளர்கள் தங்கத்தை மீண்டும் தங்கள் போர்ட்ஃபோலியோவில் அதிகரிக்க தொடங்கியுள்ளனர். இதனிடையே தான் தங்கமானது தாறுமாறான ஏற்றம் கண்டு வருகிறது. தங்கத்துடன் வெள்ளியும் ஏற்றம் கண்டு வருகிறது. வெள்ளிக்கு கூடுதலாக தொழில்துறை உலோகம் என்ற பெயரும் இன்னும் ஆதரவாக அமைந்துள்ளது. இதுவும் தற்போது 95.50 டாலர் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.
இனி என்னவாகும்?
ஏற்கனவே தங்கம் விலையானது 5,000 டாலர்களை எட்டும் என்று கணித்துள்ள ஜேபி மார்கன், சிட்டி குரூப் கணிப்புகள், தற்போது விரைவில் எட்டி விடலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் போகிற போக்கை பார்த்தால் மேற்கண்ட காரணிகள் மத்தியில், தங்கம் 5,000 டாலர்களை விரைவில் எட்டி விடும் என்பது தவிர்க்க முடியாத ஒன்று தான்.
டெக்னிக்கலாக பார்க்கும்போது தங்கமானது ஏறுமுகமாகவே உள்ளது. இருப்பினும் இந்த வர்த்தகத்தில் அளவுக்கு அதிகமான முதலீட்டாளர்கள் குவிந்துள்ளதை குறிக்கும் வகையில் சில சிக்னல்கள் உள்ளன. குறிப்பாக மூவிங் ஆவரேஜ்-ஐ பார்க்கும்போது 100-நாள் சராசரி விலை கோடு தொடர்ந்து மேல் நோக்கிச் செல்வது, நீண்ட கால அடிப்படையில் தங்கம் தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது. எம்.ஏ.சி.டி இண்டிகேட்டரும், வாங்குபவர்களின் ஆர்வம் (Buyer Interest) அதிகரித்து வருவதையும் சந்தையின் வலிமையையும் காட்டுகிறது. ஆக தங்கம் வாங்க நினைப்பவர்கள் சரியான ஆலோசனையுடன் திட்டமிடல் சிறப்பு.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications